குழந்தை பிறந்ததும் உடனடியாக தாய்ப்பால் கொடுக்க தொடங்கி விட வேண்டும். தாமதிக்கக் கூடாது.
இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம்.நன்கு ஈரத்துணியால் துடைத்து எடுக்கப்பட்ட குழந்தையை, தாய் தன் மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் தாயின் மார்பிலிருந்து பால் சுரப்பதை தூண்டுவேதாடு தாய்க்கும் சேய்க்கும் இடையிலான பாசப் பிணைப்பை ஏற்படுத்தும்.
குழந்தை பிறந்த 30 லிருந்து 60 நிமிடங்களில் நன்கு இயல்பாக சுறுசுறுப்பாக இருக்கும்.
இந்த சமயத்தில் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிறமான சுரப்பு.இதில் முழுக்க குழந்தைக்குத் தேவையான பாதுகாப்புப் பொருட்கள் உள்ளன. இப்பொருட்கள் குழந்தையை நோய் தாக்குவதில் இருந்து பாதுகாக்கிறது.
இந்த சீம்பால் கிட்டத்தட்ட ஒரு நோய் தடுப்பு மருந்து போன்றது.தாய்ப்பால் கொடுக்காவிட்டால் தாயின் மார்பகங்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வலி ஏற்படும். எனவே அதிகமாக பால் கொடுப்பது தாய்க்கு நல்லது.சிசேரியன் அறுவை சிகிச்சை தாய்ப்பால் கொடுக்கும் தன்மையை பாதிப்பதில்லை. எனவே இதனை தவறாக புரிந்து கொண்டு, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தவறு.
காலையில் மார்பை சுத்தம் செய்யாமலோ அல்லது குளிக்காமலோ தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
குழந்தையின் உதடு கருத்துவிடும் என நினைத்து, தாய்ப்பால் கொடுத்ததும் குழந்தை உதட்டை அழுத்தி சுத்தம் செய்வது தவறு.
குழந்தையின் உதடு கருத்துவிடும் என நினைத்து, தாய்ப்பால் கொடுத்ததும் குழந்தை உதட்டை அழுத்தி சுத்தம் செய்வது தவறு.
Tags
பொது குறிப்புகள்.