கருப்பான உதட்டை சிவப்பாக மாற்ற சில டிப்ஸ்!


முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். மகிழ்சி,துக்கம்,சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதுபோல தான் உதடுகளும். பெண்களுக்கு மென்மையான சிவந்த உதடுகள் வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்.

உங்கள் உதடுகள் அழகாகவும் சிவப்பாகவும் பராமரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

* பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் விரைவில் உதடுகள் அழகாகும். 

* தினமும் இரவில் படுப்பதற்கு முன்பு எலுமிச்சை சாற்றில் சிறிதளவு நாட்டுச் சர்கரையை சேர்த்து சர்கரை கரைவதற்குள் அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து பின் 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். பின்பு ஏற்படும் மாற்றத்தை நீங்கள் பார்க்கலாம்.


* பாலுடன் சிறிது நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதட்டில் உண்டாகும் கருமை மறைந்து சிவந்த உதடாக மாறும்.

* தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அல்லது பாதாம் எண்ணெய்களை உதட்டில் தேய்த்து வர உதடுகள் கருமை நீங்கும்.

* வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தாலும் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

* கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகளின் கருப்பு நிறத்தை அகற்றிவிடும்.

உதட்டை அழகாக்க சில இயற்கை முறைகளை செய்து பயன்படுத்துங்கள்.

தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் :-
தேவையான பொருட்கள்- தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன்.
தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு,தேன்,மற்றும் சர்க்கரையை கலக்குங்கள். நன்றாக கலந்ததும் அதனை கொண்டு உதட்டில் வாரம் மூன்று முறை தேயுங்கள்  ஒரே வாரத்தில் மிருதுவான உதடாக மாறும்.

Post a Comment

Previous Post Next Post