விடாத கறைகளை விரட்டியடிக்க சில டிப்ஸ்.!!


ஒரு அழகான வீட்டைகட்டி என்னதான் அழகாக பராமரித்தாலும் பாத்ரூம், சிங்க் தொட்டி , கிச்சன், போன்ற முக்கிய இடங்களில் கறைகள் படிவதை தடுக்க முடியாது. அவற்றை சுத்தம் செய்ய எத்தனை வகை கெமிக்கல் நிறைந்த பொருட்களை கொண்டு சுத்தம் செய்தாலும் அவை பளிச்சிடாது, ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டு எளிதாக சுத்தம் செய்யலாம் .

எலுமிச்சை :
எலுமிச்சை உடலுக்கு மட்டுமல்ல வீட்டில் ஏற்படும் கறைகளுக்கும் அது நல்லது. வீட்டில் உள்ள சிறு குழாய்கள், பாத்ரூம் குழாய்கள் போன்றவற்றில் எழுமிச்சை சாற்றை ஊற்றி ஊறவைத்து சிறிது நேரம் கழித்து தேய்த்தால் கறைகள் நீங்கி பளபளக்கும்.


ஆலிவ் ஆயில் :
அதிக விலைக்கொடுத்து ஃபர்னிச்சர்கள் வாங்குவது பெருமை அல்ல  அந்தப் பொருளை சுத்தமாகவும் பளபளப்பாகவும் பராமரிப்பது அவசியம். எனவே அதற்கு ஒரு மேசைக்கரண்டி ஆலிவ் ஆயிலில் அரை மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொண்டு அதை ஒரு பருத்தி துணியை கொண்டு துடையுங்கள் உங்கள் ஃபர்னிச்சர்கள் இயற்கைமுறையிலான பாலிஷாகவும், கறைகள் நீங்கி, கரையான் தொல்லைகள் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.


வினிகர் :
ஒரு மேசைக்கரண்டி வினிகரில் அரைமேசைக்கரண்டி நீர் சேர்த்து சமையலறை, சிங்க் தொட்டி, சிங்க் குழாய், குளியலறை டைல்ஸ் கறைகள், சிங்க் தொட்டி கறைகள், இரும்பு பொருட்களுக்கு அடியில் ஏற்படும் இரும்புக் கறைகள் போன்றவற்றை இது நீக்கும். மற்றும் அடி பிடித்த பாத்திரக் கறைகளையும் நீக்கும்.


பேக்கிங் சோடா :
வீட்டில் கறைகள் அதிகம் படியும் கால் மிதிகளை துவைப்பது என்பது பெரும்பாடு ஆனால் இனி அதுவும் எளிமையாகிவிடும். பேக்கிங் சோடாவை துணி ஊறவைக்கும் டிட்டர்ஜண்ட் பவுடருடன் கலந்து கால் மிதிகளை ஊற வைத்தால் அதில் எப்படிப்பட்ட கறைகளும் நீங்கும். இதற்கு கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் ஒரு மேசைக்கரண்டி டிட்டர்ஜண்ட் பவுடருடன் ஒரு மேசைக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து துணிகளை ஊறவைத்து துவைத்தால் எல்லா கறைகளும் நீங்கும்.



Post a Comment

Previous Post Next Post