இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்ட அதிக உயிர் உயிரிழப்புகளுக்கு காரணமான நான்கு வகை பாம்புகள்...
காட்டு விரியன் (Bungarus Caeruleus):
அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு ,இது காட்டு விரியன், எட்டடி விரியன், பனை விரியன் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. ஒருவரைத் தீண்டினால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சை எடுக்கவேண்டியது அவசியம். இது கறையான் புற்றுகளிலோ , மண், குப்பை கூளங்களிலோ பதுங்கிக்கொள்கின்றன.
நல்ல பாம்பு (Naja Naja ):
இந்தியாவில் அதிகம் காணப்படும் பாம்புகளில் இதுவும் ஒன்று. இதை நாகப்பாம்பு என்றும் அழைக்கின்றனர். இப்பாம்பு கற்களுக்கு அடியிலும் இடிபாடுகளுக்கிடையிலும் வாழக்கூடிய தன்மையுடையது. சில சமயம் வீட்டுகுள்ளும் புகுந்துவிடும்.
சுருட்டை விரியன் (Echis Carinatus):
இது அளவில் மிகச் சிறியதாக காணப்படும். தடிமனான சிறிய உடலமைப்பை உடையது. தலை முக்கோண வடிவில் இருக்கும். இது தன் உடலை எண் 8 வடிவத்தைப் போல சுருட்டிக்கொண்டு இருக்கும். இவை பெரும்பாலும் இரவில் நடமாடக்கூடியது, இது மரங்கள் , பொந்துகள் போன்றவற்றில் வாழும்.
கண்ணாடி விரியன் (Daboia russelii):
இந்த பாம்பின் விஷமானது இரத்தத்தை சிதைக்கும் தன்மைக்கொண்டது. பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இந்த வகை பாம்புகள்தான் காரணம்.
தகவல் by. Wikipedia
Tags
பயனுள்ள தகவல்