அல்சர் வந்தால் சாப்பிட வேண்டியவை! தவிர்க்க வேண்டியவை!


அல்சர் வர முக்கியகாரணம் காரசாரமான உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, அதிக மசாலா நிறைந்த உணவு, மற்றும் அதிகமாக மாத்திரைகளை சாப்பிடுவது  ஆகியவை அல்சரை உருவாக்கும்.

அல்சர் வந்து விட்டால் உணவு சாப்பிடுவதில் கவனமாக இருக்கவேண்டும். கவனம் இல்லாமல் இருந்தால் அல்சர் அதிகமாகிவிடும்.

சாப்பிட வேண்டியவை:
* மணத்தக்காளி அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது வயிற்றுப் புண் மற்றும் அல்சரை விரைவாக குணமாக்குகிறது.

* அல்சர் இருப்பவர்கள் தினமும் சோற்றில் தேங்காய்பாலை சேர்த்து சாப்பிட்டுவந்தால் வயிற்றில் உள்ள புண் விரைவில் குணமாகும். வாரத்திற்கு மூன்று முறை ஒரு கப் அளவு தேங்காய் பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவந்தால் குடல் அல்சரால் பாதிக்கப்பட்ட மெல்லிய சவ்வுத் தோல் விரைவாக வளர்சிப்பெற்று புண்களை ஆற்றிவிடும்.


* வேப்ப இலையை தினம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் அல்சர் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

* புழுங்கல் அரிசியில் சாதம் வடித்த கஞ்சியை வயிற்றுப்புண் உள்ளவர்கள் குடித்துவந்தாலே புண் குணமடையும்.

* அல்சருக்கு அகத்திக்கீரை மிகவும் சிறந்தது. ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டுவந்தால் அல்சர் சீக்கிரமாக குணமாகும்.

* நெல்லிக்காய் ஜுஸில் தயிரை சேர்த்து கலந்து குடித்துவந்தால் ஒரு சிறப்பான தீர்வை தரும்.

தவிர்க்க வேண்டியவை :
* அல்சர் உள்ளவர்கள் டீ, காபி போன்றவற்றை அதிகமாக குடிக்கக்கூடாது.

* அல்சர் உள்ளவர்கள் காரமான உணவு வகைகளை தவிர்ப்பது மிக நல்லது. இல்லை என்றால் அது அல்சரை இரட்டிப்பாக்கிவிடும்.

* அல்சர் உள்ளவர்கள் ஆல்கஹாலை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

* அல்சர் உள்ளவர்கள் பீடி, சிகரெட் பழக்கத்தை விடுவது நல்லது.

* அல்சர் உள்ளவர்கள் காஸ் அடைக்கப்டட்ட குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்கவேண்டும்.


* அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளை தவிர்க்க வேண்டும். சிலர் பாலை குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால் பாலில் இருக்கும் புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும் வயிற்றுப் புண்ணுக்கு ஆபத்தைதான்  ஏற்படுத்தும்.

தகவல் திரட்டப்பட்டது. by . K.A....

Post a Comment

Previous Post Next Post