அன்புள்ள தாயே உனக்காக !


தாயை போல அன்பு கொள்ள
தாயை தாண்டிஉறவில்லை...

சொல்லில் அடங்கா தியாகம் செய்தவளைசுமை என நான் நினைக்கவில்லை...

என்னை சுமந்த சுமைதாங்கி "நீ"
உனை தாங்க எனக்கென்ன பாரம்...

கடல் தாண்டி இருந்தாலும்
உனை நினைக்கும் என்னுல்லம்...

என் உடலும் உயிரும் நீ தந்தது
உனக்காக உடல் வருத்துவதிலும் உயிர் கொடுப்பதிலும்
எனக்கென்ன தயக்கம் தாயே.

அறை கஞ்சி குடித்தாலும்
 குறைவின்றி எனைவளர்த்"தாய் "

பல துன்பங்கள் உடனிருந்தாலும்
நிறை அன்போடு எனை வளர்த்"தாய்"

எதையோ கண்டு நான் அழ
எனைக் கண்டு நீ அழு"தாய்"

விழுந்து விழுந்து நான் நடக்க
என் கையை பிடித்து நடக்கவைத்"தாய்"

அயராது உழைத்தவளே எனக்காக தூங்காமல் கண் விழித்தவளே..
உன்னை வணங்குகிறேன்.    
            என்   " தாயே "
by . K. A

Post a Comment

Previous Post Next Post