குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்.


குழந்தைகளுக்கு நோய் எதிப்புச் சக்தி குறைவாக இருப்பதால் அடிக்கடி இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன. 

கீழ்காணும் உணவுகளை குழந்தைகளுக்கு தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மற்றும் நோய்கள் அண்டாமல் தடுக்க உதவும்.

கீரை வகைகள்.
வளரும் குழந்தைகளுக்கு தினமும் அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது கீரை கொடுப்பது நல்லது. கீரையில் உள்ள அயர்ன், வைட்மின்கள், தாது உப்புகள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும்.


காய்கறிகள்.
குழந்தைகள் உணவுத்தட்டில் காய்கறி வகைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். முக்கியமாக பீட்ரூட், கத்திரிக்காய் , காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் இன்னும் சில முக்கிய காய்கறிகளை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும். மழைக்காலத்தில் காய்கறிகளை சூப்பாக வைத்து குடிக்ககொடுக்கலாம். அசைவம் சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டன் எழும்பு சூப் நல்ல சாய்ஸ்..


தயிர்.
தயிரில் உள்ள ஆன்டி பாக்டீரியாக்கள் கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை வரவிடாமல் தடுக்கும். மற்றும் குடல் சுத்தமாகி வயிறு இன்ஃபெக்ஷன் ஆகாமல் தடுக்கும். தயிர் பிடிக்காத குழந்தைகளுக்கு ஒரு டம்ளர் மோர் கலக்கி குடிக்கக்கொடுக்கலாம்.


பழ வகைகள்.
ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம் , கொய்யா பழம், மாதுளை போன்ற பழங்கள் மட்டுமல்லாமல் வைட்டமின் சி அதிகமாக உள்ள பழங்களை அதிகஅளவில் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும். பப்பாளி, நெல்லிக்காய் , சாத்குக்குடி, கமலா ஆரஞ்சு, என புளிப்புத்தன்மை கொண்ட பழவகைளில் அதிகமாக வைட்டமின் சி இருப்பதால் உடலின் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும். மற்றும் வைரஸ் மூலம் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கும்.



நட்ஸ்.
பாதாம், பிஸ்தா, அக்ரூட், போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை பழம், போன்ற உலர் பழங்களை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்துவர நோய் எதிர்பு சக்தி சீராக இருக்கும். இவற்றில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் மினரல்ஸ் , வைட்டமின்கள் உள்ளன.



மீன்.
குழந்தைகளின் உணவில் அடிக்கடி சேர்க்கவேண்டியது மீன், இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மற்றும் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் இதில் உள்ளது. இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க உதவுவதுடன் கண் பார்வை குறைபாட்டை தவிர்த்து மூளை வளர்ச்சிக்கு உதவும். எனவே குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது மீன் கொடுக்கவேண்டும்.



தானிய வகைகள்.
கம்பு, சோளம், கோதுமை, ராகி, கேள்விரகு, போன்ற தானிய வகைகளை சேர்த்து பொடிசெய்து கஞ்சியாகவோ, ரொட்டியாகவோ, அல்லது தோசையாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதில் உள்ள நார்சத்து மற்றும் ஜிங் உடலை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் .


முட்டை.
வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய முக்கிய உணவு முட்டை இதில் அதிக அளவு புரதங்கள் இருப்பதால் உடல் உறுப்புகள் வளரவும் திசுக்களை சீரமைக்கவும் உதவும். மற்றும் எலும்புகள் , பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி வேகவைத்த முட்டையில் அதிகஅளவு உள்ளது.


by.K.A..

Post a Comment

Previous Post Next Post