மண்பானையின் மகிமை!!


தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் வெயில் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்கு நிழற்குடை இருக்கும் என்ற ஏக்கம் , கூடவே ஜில்லுனு தண்ணீர் கிடைக்குமா , மோர் கிடைக்குமா, ஜூஸ் கிடைக்குமா என்ற ஏக்கம் அனைவருக்கும் ஏற்படுகின்றது.

ஒரு பக்கம் வெள்ளிரிக்காய், இளநீர், கரும்புச்சாறு, மற்றும் பழச்சாறு போன்றவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் சாதாரண மக்கள் முதல் கோடிஸ்வரர்கள் வரை மண்பானையை தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது.

மண்பானையின் சிறப்பு : பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த தண்ணீரை குடித்தால் சளி, காய்ச்சல் போன்றனவ ஏற்படும். ஆனால் மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து எத்தனைநாள் கழித்து குடித்தாலும் சளி ஏற்படாது. மற்றும் தண்ணீர் அதிக குளிச்சியாகவும், தண்ணீர் நல்ல சுவையாகவும், நல்ல நறுமனத்துடனும் இருக்கும். உங்களின் இல்லங்களில் எளிதாக பயன்படுத்தும் வகையில் மண்பானையில் பிளாஸ்டிக் பைப்பொருத்தியும் மண்பானைகள் விற்பனைசெய்யப்படுகின்றது.


Post a Comment

Previous Post Next Post