கட்டாயம் சாப்பிடவேண்டிய ஐந்து பருப்பு வகைகள்!


பாதாம் பருப்பு :
ஒரு கைபிடி பாதாம் பருப்பில் ஏராளமான கால்சியம், மக்னீசியம், விட்டமின்கள், புரதம், நார்சத்து, பைபர், ஜிங்க், இரும்பு சத்து, போன்ற சத்துக்கள் ஏராளம் உள்ளது. இதனை சாப்பிடுவதால் மூளை சிறப்பாக இயங்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும் . மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

முந்திரி :
முந்திரியில் உள்ள சத்துக்கள் உடல் ஆரேக்கியத்திற்கும் இதயத்தை பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது. இது கொழுப்பினை குறைக்கும். இரும்புச்சத்தினை தரும் , சர்க்கரை நோயினை தடுக்கும். கண்பார்வை, முடி வளர்ச்சி, சரும பாதுகாப்பிற்கு மிக நல்லது.

சியா விதைகள் :
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி தீரும். உடல் எடையை குறைக்கும். செரிமான திறன் அதிகரிக்கும், புத்துணர்ச்சியினை அதிகரித்து மூளையின் செயல்பாட்டிற்கு இது உதவும். ஆர்த்ரைட்டீஸ் , சர்க்கரை நோய்கள் வருவதை தடுக்கும்.

பூசணி விதைகள் :
பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பினை குறைத்து இதயநோய் வருவதை தடுக்கும்,மன அழுத்தத்தினை போக்கும் , புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கும்.

வால்நட் :
தினமும் 7 வால்நட் சாப்பிட்டுவந்தால் மார்பக புற்றுநோயினை தடுக்கலாம், கொழுப்பினை குறைக்கும். இரத்த அழுத்த்தினை கட்டுக்குள் வைத்திருக்கும் உடல் எடையை குறைக்க உதவும். இரதத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சரும பளபளப்பிற்கும் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவும்.

Post a Comment

Previous Post Next Post