கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக, பிரச்னையில்லாமல் இருப்பது என்பது இன்று அரிதாகிவிட்டது. இதற்கு காரணம் நிறைய சலிப்பு, சன்டை, கோபம், வருத்தம், வெறுப்பு, ஏக்கம், சரியான புரிதல் இல்லாதது போன்றவையாகும். இவற்றையெல்லாம் தாண்டி எப்படி வெற்றி காண்பது ????
கணவன் மனைவி பந்தத்தை எளிமையான முறையில் மகிழ்ச்சியாக்குவது எப்படி?
* பாராட்டி தள்ளுங்கள்…
சின்ன விஷயம் முதல் பெரிய விஷயம் வரை, அனைத்துக்கும் பாராட்டுங்கள். பாராட்டினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் பாராட்டுவதில் என்ன கஷ்டம். காசா, பணமா… பாராட்டுதானே அள்ளி விடலாம். இதனால் நிஜமாகவே உறவில் மாற்றம் ஏற்ப்படும்.
* எதை வாங்கி கொடுத்தாலும் சரி… எதை உங்களுக்கு பரிசாக தந்தாலும் சரி…இந்த இரண்டு வார்த்தைகளை நினைவில் வையுங்கள்… ஒன்று, நன்றி…(Thanks) இன்னொன்று, சூப்பர் (Super)… இது இரண்டுமே நேர்மறை வார்த்தைகள். மகிழ்ச்சியை இரெட்டிப்பாக்கும்
* துணையின் சுகந்திரத்துக்கு மதிப்பு கொடுத்து ஆரோக்கியமான இடைவேளியை அமைத்து கொள்ளுங்கள்…வெறுப்பும் வராது... என் துணை எனக்கு வரம் என்ற பெயர் உங்களுக்கு கிடைக்கும்.
* உலகில் இந்த ஒற்றை வார்த்தையை அனைவரும் நினைத்தாலே, அடுத்த நிமிடமே இந்த உலகம் அமைதியால் தழுவும். ஆகச் சிறந்த பெருவார்த்தை அது ‘மன்னிப்பு’... பெருந்தன்மை மிக்க செயல்… பேரின்பத்தைத் தரும். பேரன்பை கொடுக்க வல்லது. உறவுகளில் ஆழமான திருப்புமுனையை கொடுக்கும். எதிர்பாராத திருப்புமுனையைகூட தரும். இழந்ததை மீட்டுக் கொடுக்கும். இழக்காமல் இருப்பதைகூட தவிர்க்கும்.
* எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள்.
* ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும்.
துணையிடம் வெளிப்படையாக இருப்பது அவசியம்தான் என்றாலும், சில விஷயங்களை சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் துணைக்கு புரிதல் , நம்பிக்கையோடு உங்கள் மீது மரியாதையும் அதிகரிக்கும்.
Tags
உறவு