கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை : 200 கிராம்
மிளகாய் வற்றல் : 2
தேங்காய் துருவல் : 1 கப்
கடுகு உளுந்து : 1 டீஸ்பூன்
உப்பு : தேவையானது
பெருங்காயம் : ½ டீஸ்பூன்
எண்ணெய் : தாளிக்க

செய்முறை:

கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, மிளகாய், வற்றல் சேர்த்து வதக்கி கடலையில் கொட்டி கிளறவும். பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறவும். சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

Post a Comment

Previous Post Next Post