சமீபத்தில் பல ஸ்மார்ட்போன்கள் புதிய புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியது,. என்னதான் ஸ்மார்ட்போனில் பல புதிய அம்சங்களை கொண்டு வந்தாலும் இந்த ஸ்மார்ட்போனிகளில் பல மடங்கு ஆபத்துகளும் நிறைந்து உள்ளது , மேலும் பல ஸ்மார்ட்போன்களில் அதிக கதிர்வீச்சுகள் (Radiation ) கொண்டுவருகிறது இதனால், பாதிக்கப்படுவது பறவை மற்றும் விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களையும் பெரிய அளவில் குழந்தைகளையும் இது பாதிக்கிறது.
ஒரு குழந்தை அதிகம் இது போன்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியை பெரும் அளவில் பாதிக்கிறது
செல்போனாலும் , செல்போன் கோபுரங்களாலும் சிறுவர்களும் குழந்தைகளும் அதிகமாக பாதிப்படைகின்றனர்.
செல்போனாலும் , செல்போன் கோபுரங்களாலும் சிறுவர்களும் குழந்தைகளும் அதிகமாக பாதிப்படைகின்றனர்.
குழந்தைகளின் சிறிய தலை , சிறிய அளவில் மூளை மழுமையாக வளர்ச்சியடையாத எலும்புகள் , மென்மையான தோல் , மெல்லிய செவி என எல்லாமும் அதிக அளவுக்கு மின்காந்த கதிர்வீச்சால் பாதிப்படைகின்றன . குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் - கதிர்வீச்சின் பாதிப்புகள் அவர்களை எளிதில் தாக்குகின்றன . செல்பேசிக் கருவிகளை வைத்து விளையாடும் குழந்தைகள் ஞாபக சக்திக் குறைவு , கவனக் குறைவு , கற்கும் திறன் குறைவு உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதிசெய்யப்பட்டுள்ளாது.
எனவேதான் , பெரும்பாலான மேற்குலக நாடுகள் 16 வயதுக்கு கீழுள்ளவர்கள் செல்பேசியை பயன்படுத்த பயன்படுத்த வேண்டாம் என வெளிப்படையாக அறிவுறுத்துகின்றன .