உடலுக்கு வலிமை தரும் பருத்தி பால் செய்வது எப்படி ?


பருத்தி விதைகளில் கோலின், விட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது.பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும் அதுமட்டுமின்றி டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாக கருதப்படுகின்றது. தற்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 100 கிராம் 
கருப்பு பருத்தி விதை - 50 கிராம் தேங்காய் மூடி - 1 
தேங்காய் துருவல் - விருப்பத்திற்கு ஏற்ப 
ஏலக்காய் - 3 
முந்திரி - சிறிதளவு 
சுக்கு - சிறிதளவு 
கருப்பட்டி - 1 வட்டு ( பெரியது )

செய்முறை:

 6 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த பருத்திவிதையை , மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும் . பச்சரிசியையும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும். கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காயை மிக்சியில் போட்டு பால் எடுத்து கொள்ளவும் . பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் . அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும் . அரிசி வெந்தவுடன் , குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து , பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்
பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்த்து அதனுடன் சுக்கு , ஏலக்காய் , தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும் . தேங்காய் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம் . அதன் பிறகு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பருத்தி பால் தயார் .

Post a Comment

Previous Post Next Post