ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…


ஆண்கள் குழந்தை போன்றவர்கள். அவர்கள் எதையும் சரியாக யோசிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் நிறைய பாசத்தை வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் காதலிப்பவர்கள், அல்லது துணையாக வரக்கூடியவர்கள் தனது மனதை சந்தோஷமாக வைத்திருக்கக் கூடிய, தன்னை நன்கு புரிந்து கொள்ளக் கூடிய, எந்த வகையிலும் தனக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஒரு பெண்ணையே எதிர் பார்ப்பார்கள்.

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ கணவன் - மனைவி இருவருக்குமான அன்பும் காதலும் அவர்களின் முதுமையிலும் தொடர்ந்தால்தான் அந்தத் திருமணம் வெற்றியடைந்ததாக அர்த்தம்.

இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.
எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. 


மேலும் தன் துணையின் எதிர்பார்ப்பு புரிந்தும், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்காமல் இருந்தால், உண்மையில் அந்த உறவில் எந்த ஒரு மிகழ்ச்சியும் சுவாரஸ்யமும் இருக்காது.
அதுமட்டுமல்லாமல் ஆண்கள் ஒரு பெண்ணின் அழகை விட, குணத்தைக்தான் விரும்புகின்றனர்.

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

அழகை சரியாக பராமரித்து வரும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்கள்.

காதலனை அவர்கள் போக்கில் விடும் பெண்களையும் ஆண்களுக்கு பிடிக்கும். 
ஏனெனில் உறவில் கொஞ்சம் சுதந்திரம் இருந்தால் தான், அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கும்.

புத்திசாலித்தனத்துடன் செயல்படும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.


ஆண்கள் பெண்களை விட மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். ஆனால் அவர்களுக்கு அதை வெளிப்படுத்தத் தெரியாது. ஏனெனில் அவர்கள் அவ்வாறு வெளிப்படுத்தினால், அப்போது அவர்கள் அழ நேரிடும். பிறகு அது ஆண்களுக்கே பெரும் மைனஸ் ஆக மாறிவிடும். ஆகவே அவர்கள் தங்கள் உணர்ச்சியான பாசத்தை வெளிப்படுத்தும் போது காதலியானவள் அல்லது துணையானவள் புரிந்து கொண்டு, அவர்களது உணர்வை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் வெளிப்படுத்தும் போது அது சற்று கோபம் போன்று இருக்கும். ஆகவே அதைப் புரிந்து அனுசரித்து செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் இருவருக்கும் இருக்கும் பாசமானது ஆழமாக நீண்ட நாட்கள் இருக்கும்.


by .K.A....

Post a Comment

Previous Post Next Post