சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள டிஜிகாப் (DIGICOP) என்ற செல்போன் செயலியின் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில்.....
பொதுமக்களுக்கு காவல்துறை அளிக்கும் சேவையை எளிமைப்படுத்தும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
* செல்போன் தொலைந்தால் இந்த செயலி மூலம் உங்களது புகாரை செல்போனின் IMEI - எண்ணை பதிவுசெய்து புகாரளிக்கலாம். மேலும் உங்களது புகாரின் நிலை என்ன என்பதையும் அடிக்கடி செக் செய்து நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
* செல்போன் தொலைந்தால் இந்த செயலி மூலம் உங்களது புகாரை செல்போனின் IMEI - எண்ணை பதிவுசெய்து புகாரளிக்கலாம். மேலும் உங்களது புகாரின் நிலை என்ன என்பதையும் அடிக்கடி செக் செய்து நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
* நீங்கள் பழையை செல்போன் ஒன்றை விலைக்கு வாங்குகிரீர்கள் என்றால் அது திருட்டு செல்போனா இல்லையா என்பதையும் இந்த செயலி மூலம் கண்டறியலாம். அந்த செல்போனின் IMEI எண்ணை பதிவு செய்தால் அது திருட்டு செல்போனா இல்லையா என்பதை அறியலாம்.
* போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த தகவல்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளது.
* தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் ஆகியவையும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.
* காவல் துறை வெளியிடும் அனைத்து அறிவிப்புகள் மற்றும் செய்திகள் உடனுக்குடன் இந்த செயலியில் வெளியிடப்படுகிறது.
* உங்களுக்கு அருகில் எந்த காவல் நிலையம் உள்ளது என்பதையும் உங்களது ஜி,பி,எஸ் மூலம் இந்தசெயலி கண்டறிந்து காட்டுகிறது.
இந்த செயலி கூகுல் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பில் ஸ்டோர்களில் இந்த செயலியை இலவசமாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.,