சுவையான நண்டு குருமா செய்வது எப்படி?


நண்டு சாப்பிட்டால் சளி, தொண்டை கோளாறுகள் தீரும்.  கடல் உணவு வகையில் நண்டு மிகவும் சுசியான உணவு வகையாகும். அதனால் நண்டு குருமா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
நண்டு 6,
வெங்காயம் 2 ,
தக்காளி 2 ,
இஞ்ஜி பூண்டு பேஸ்ட் 2 tsp ,
பச்சை மிளகாய் 2,
தனியா பொடி 1 tsp,
மிளகாய் பொடி 1 tsp,
மஞ்சால் தூள் அரை tsp,
கரம் மசாலா பொடி 1 tsp,
பட்டை, லவங்கம் 1 ,
கறிவேப்பிலை சிறிது,
சீரகம் 1 - tsp ,
சோம்பு 1 tsp,
எண்ணெய் 2 tsp ,
கொத்தமல்லி தேவையான அளவு,
உப்பு தேவையான அளவு,

அரைக்க வேண்டியவை :
துருவிய தேங்காய் கால் கப், மற்றும் கசகசா 1 tsp ,


செய்முறை:
நண்டை நன்றாக சுத்தம் செய்து கொஞ்சம் உப்பு சேர்த்து தனியாக வைத்துக்கொள்ளவும்,

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம், சீரகம் சோம்பு சேர்த்து பொறிக்க விட்டு கறிவேப்பிலையை சேர்க்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கிய உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பின்பு தக்காளி சேர்த்து நன்கு மசியும்வரை வதக்கவும்.

மசித்ததும் மிளகாய் தூள், தனியா பொடி, மஞ்சல் தூள், சேர்த்து பச்சைவாசனை போகும்வரை கிளறவும். அடுத்ததாக நண்டுகளை அதில்போட்டு பிரட்டவும். பிறகு 5 நிமிடம் வதங்கியதும் அரைத்த தேங்காய்யை அதில் சேர்க்கவும் குறைந்த அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு குருமா வரும் வரை கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பிறகு இருதியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கிவிட்டால் சுவையான நண்டு குருமா ரெடி.

Post a Comment

Previous Post Next Post