ஆரோக்கியமான உடலுறவு குடும்ப வாழ்க்கையில் மன நிறைவை ஏற்படுத்தும். செக்ஸ் இன்பத்தை மட்டும் தருவது கிடையாது உடல்ரீதியாக பல நன்மைகளை தருகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில் ஆரோக்கியமான உடலுறவு குடும்ப வாழ்க்கையில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.
* உடலுறவால் உடல் எடை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
* உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டுமுறை உடலுறவில் ஈடுபடுவதால் 30 சதவீதம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* அடிக்கடி ஏற்படும் உடல் தொந்தரவுகளான சளி, இருமல், தலைவலி, உடல்வலி போன்ற நோய்களை எதிர்க்கக்கூடிய எதிர்ப்புசக்தியானது உடலுறவால் அதிகரிக்கிறது.
* குறைந்தது வாரம் இரண்டுமுறையாவது துணையுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் இதயம் வலுபெறுவதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறியுள்ளது. மற்றும் ஆண்களை அதிகமாக தாக்கும் மாரடைப்பு, நெஞ்சுவலி, போன்ற இதயம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு உடலுறவு நல்ல தீர்வாக இருப்பதாக கூறியுள்ளது.
* தூக்கமின்மையால் அவதிபடும் பலருக்கு மருத்துவர்கள் அணிவுறுத்தும் ஒரே மருந்து செக்ஸ் என்கிறது அமெரிக்காவை சேர்ந்த நோய் கட்டுபாடு தடுப்புமையம். ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையால் 7 முதல் 9 மணி நேர தூக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது.
* மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கும். அர்ச்சீவ்ஸ் ஆஃப் செக்சுவல் பிஹேவியர் நடத்திய ஆய்வில் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வதால் மூளையின் நினைவுத்திறன் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. புரிந்து கொள்ளும் திறன், கற்பனைத் திறன், நூண்ணறிவுத்திறன், ஆகியவை அதிகரிக்கிறதாம்.
* உடல் பொலிவு பெறும். செக்ஸின் போது உடலின் நச்சுத்தன்மை அதிகமாக வெளியேறுவதால் உடல் பொலிவு ஏற்படுவதுடன் உடற்பயிற்சியால் கிடைக்கும் உடல் கட்டமைப்பு உடலுறவிலும் கிடைக்கிறது.
* மன அழுத்தம் மறந்து போகும். உடல் மற்றும் மனதளவிலான உணர்ச்சிபூர்வமான உடலுறவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
* இன்பத்தின் உச்சநிலையை உடலுறவில் மட்டுமே உணரமுடியும். தொடர் உடலுறவால் கணவன் மனைவி அன்பு அதிகரிப்பதோடு ஆண்மையும் அதிகரிக்கும்.,,
Tags
உடல் உறவு குறிப்பு