நமது வீட்டின் சமையலறையில் தினம் தினம் பயன்படுத்தப்படும் காய்கறிகளை நம் வீட்டிலேயே வளர்த்து நமக்கு தேவையான காய்கறிகளை உடனுக்குடன் பறித்து சமைத்தால் அதன் சுவையே தனி.,
அனைத்துவிதமான கீரைகள், தண்டு கீரை, பாலக்கீரை, பொன்னாங்கன்னி கீரை, மனத்தக்காளி கீரை, பசலைக் கீரை, வெந்தயக்கீரை, ஆகிய கீரை வகைகளை வீட்டிலேயே வளர்க்கலாம். தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய் , வெண்டைக்காய், வெள்ளரிக்காய் , அவரைக்காய், பீட்ரூட், கேரட், முள்ளங்கி போன்ற பல காய்கறிகளை வீட்டில் வார்க்கமுடியும். மற்றும் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, வாசனை தரக்கூடிய ரம்பா இலை போன்ற செடிகளையும் வீட்டில் வளர்க்கலாம்.
கொடிவகை காய்கறி செடிகளான வெள்ளரி, அவரை, பூசணி, பசலை கீரை, போன்றவற்றை வீட்டின் சுவரில் கம்பி வலைகள் அமைத்து அதன்மீது கொடிகளை விடலாம்.
கத்தரிக்காய் , வெண்டைக்காய், இஞ்சி, தக்காளி, மிளகாய் ,வெங்காயம், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, போன்ற காய்கறி செடிகளை தொட்டிகளிலும் வளர்க்கலாம்.
செடிகளுக்கான உரம் :-
தொட்டிகளில் வளர்க்கும் செடிகளுக்கு உரம் தேவைப்படும். அந்த உரம் இயற்கையாக வீட்டிலேயே கிடைக்கும். முதலில் உரம் தயாரிக்க செய்யவேண்டியது உங்கள் வீட்டு சமையலறையில் இரண்டு குப்பைத்தொட்டி வைக்க வேண்டும். அதில் ஒன்று மக்கும் குப்பைதளை இட, இரண்டாவது மக்காத குப்பைகளை இட, மக்கும் குப்பைகளை நம் வீட்டு தோட்டங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். எந்த ரசாயன உரத்தையும் பயன்படுத்த தேவையில்லை.
Tags
நம்ம வீடு