ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உடலின் வயிறு, தொடை, பின்புறம் போன்ற இடங்களில் அதிகமாக தோன்றும். ஸ்ட்ரெட்ச் மார்க் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. அவை கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், உடல் எடை குறைதல், சருமம் திடீரென்று விரிந்து சுருங்கும் போது இந்த தழும்புகள் ஏற்ப்படுகிகிறது. அதிகமாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு இத்தழும்புகள் அதிகம் ஏற்படும்.
ஸ்ட்ரெட்ச் மார்க்கை தடுப்பது எப்படி:
* ரோஸ்மெரி ஆயிலை பாதாம் எண்ணெயுடன் கலந்து தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி 10 - 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் தழும்பானது மறையும்.
* ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை உடனே போக்கலாம்..
* பாதாம் எண்ணெய் , ஆலிவ் ஆயில், மற்றும் கோதுமை எண்ணெயுடன் கலந்து இரவில் படுக்கும் முன் மசாஜ் செய்ய வேண்டும்.
* லாவண்டர் எண்ணெயுடன் ஆலிவ் ஆயில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் அசிங்கமாக உள்ள தழும்புகளை போக்கலாம்.
* கற்றாழை ஜெல்லை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் மார்க்குகள் மெதுவாக மறையும்.
* இன்னும் எளிமையாக ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச்செய்ய வேண்டுமானால் தேங்காய் எண்ணெயை தினமும் அப்பகுதியில் தடவி மசாஜ் செய்துவர வேண்டும்.
பிரசவத்திற்கு பிறகு வரும் தழும்புகள் 10 சதவீதம் தான் அதனை இயற்கையான முறைபடியும் ஸ்ட்ரெட்ச் கிரீம்களை பயன்படுத்தியும் மறைத்துவிடலாம். மேலும் கருவுற்றிக்கும் போதும் பிரசவத்திற்கு பிறகும் மருத்துவரின் அலோசனையின் பேரில் அவர் பரிந்துரைக்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.,
தகவல் திரட்டப்பட்டது. by .K.A
Tags
அழகு குறிப்புகள்.