இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்பட உள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வழங்கப்படும் டிரைவிங் லைசன்ஸ் வெவ்வேறு வடிவத்திலும் வெவ்வேறு நிறத்திலும் உள்ளன. இதனால் சில சமயங்களில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன.
நாட்டில் 25 சதவீத்துக்கு மேற்ப்பட்ட இந்தியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவிங் லைசன்சுகள் வைத்திருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான லைசன்ஸ் முறையை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத்துரை அதிகாரிகள் கூறியதாவது..
2019 ஜூலை முதல் நாட்டிலுள்ள அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களும் (RDO Ofice) ஒரே மாதிரியான டிரைவிங் லைசன்சுகளை வழங்கும் அவை ஒரே நிறத்துடனும் மேலும் மைக்ரோ சிப், கியூ ஆர் கோடு, போன்ற பாதுகாப்பு அம்சங்களும், மத்திய, மாநில அரசுகளின் சின்னங்கள், பிறந்த தேதி, எக்ஸ்பயர் தேதி, இரத்தவகை, பாலினம், மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தவராயின் அதன் தகவல் இதில் இடம்பெறும்..
புதிய டிரைவிங் லைசன்சுகள் மட்டுமல்லாது புதுப்பிக்கப்படும் டிரைவிங் லைசன்சுகளுக்கும் இந்த புதிய முறை அமல்படுத்தபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 32,000 புதிய டிரைவிங் லைசன்சுகள் வழங்கப்படுகின்றன. மற்றும் நாள் ஒன்றுக்கு சுமார் 43,000 லைசன்சுகள் புதுபிக்கப்படுகின்றன என்பது குதிப்பிடத்தக்கது.
Tags
பயனுள்ள தகவல்