டீ அதிகம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்..!

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதை போல அதிக அளவில் டீ குடிப்பதையும் பலர் அன்றாட பழக்கமாகவும் பொழுதுபோக்காகவும் வைத்துள்ளனர். அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால் அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் அடுத்தக்கட்ட பணி செய்ய முடியும் என்ற மனநிலையிலையும் பல இருக்கின்றனர்.

அதிக அளவில் டீ குடிப்பதால் அதிலிருந்து வெளியாகும் நச்சுக்களால் கவனம் சிதறல், அமைதியின்மை , உறக்கம் கெடுதல் இன்னும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக அளவு டீ குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள் உடலில் இரும்புச் சத்து சேராமல் தடுக்கும் தன்மை ‍ கொண்டது.

ஒரு நாளைக்கு இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது அதற்கு அதிகமாக டீ குடிப்பது , அடிக்கடி டீ குடிக்க பழகிக்கொள்வது உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டு வலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். எலும்பின் உறுதிக்கு துணைபுரிகிற அதே டீ தான் எல்லைமீறும் போது எலும்பின் உறுதியை பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கு காரணம் அதிக அளவு டீ குடிப்பதுதான்.


பராஸ்டேட் புற்று நோய், உணவுக்குழாய் புற்றுநோய், போன்றவை ஏற்படுவதற்கு டீ- யும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. வாரத்திற்கு 28 முறை டீ குடிப்பவர்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

Post a Comment

Previous Post Next Post