குறட்டை பிரச்சனையா? தீர்வு தரக்கூடிய 5 வழிகள்!


குறட்டையை பற்றிய பலவித ஆய்வுகளில் சில திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளன. அதாவது மூன்றில் ஒரு ஆணும் நான்கில் ஒரு பெண்ணும் இந்த குறட்டையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறட்டை மிகவும் மோசமான ஒன்றுதான். குறட்டை விடுவதால் அவரை விட மற்றவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சில குடும்பங்களில் இதனால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. 

இப்படி குறட்டையால் அவதிப்படுவோருக்கு தீர்வாக சில வழிகள் இதில்...

இஞ்சியும் தேனும்.

குறட்டை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு கப் நீரை கொதிக்க விட்டு அதில் இஞ்சி துண்டு ஒன்றை சிறிது சிறிதாக நறுக்கி போடவும் இதை 5 நிமிடம் குறைந்த வெப்பத்தில் கொதிக்கவிட்டு இறக்கி சற்று நேரம் ஆறிய பிறகு அதனுடன் தேன் சேர்த்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய் :

தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் குடித்தால் பலவித நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன் குறிப்பாக தொண்டை பகுதியை இலகுவாக்கி தசைகள் குறட்டையை ஏற்படுத்தாமல் பாதுகாத்துக்கொள்கிறது.

பழங்கள் :

உடலில் மெலடோனின் குறைவாக இருந்தால் குறட்டை பிரச்சனை உண்டாகும். இதற்கு சில பழங்களை சாப்பிட்டால் போதும் மெலடோனின் அளவை அதிகரிக்கும். அண்ணாசி பழம், வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால் குறட்டை சீக்கிரமாகவே குறைந்துவிடும்.

சோயா பால் :

பால் பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் குறட்டை பிரச்னை அதிகரிக்கும். ஆகவே பாலுக்கு பதிலாக சோயா பாலை குடித்துவத்தால் குறட்டை தொல்லை இல்லாமல் இருக்கும். மற்றும் சோயா பால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தையும் தரும்.

மீன் :

சிக்கன் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் குறட்டை தொல்லை அதிகரிக்கும் காரணம் சிக்கன் சாப்பிடுவதால் கொண்டையின் தசை பகுதி வீக்கம் அடைந்து குறட்டையை அதிகரிக்கச் செய்கிறது. எனவே சிக்கனுக்கு பதிலாக மீன் சாப்பிடுவதால் குறட்டை தொல்லையை குறைக்கலாம். மற்றும் மீன் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகளும் உள்ளன.

إرسال تعليق

أحدث أقدم