சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்!!


சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், கால்சியம், மற்றும் நீர்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாதுஉப்புகள், நார்சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன.

இந்த பழம் இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் சீத்தா இலைகளில் கசாயம் தயாரித்து அருந்தி வந்தால் சீக்கிரமாக சர்க்கரை நோய் குணமடையும். பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவை கட்டுப்படுத்த சீத்தா மரத்தின் வேர் பெரிதும் உதவுகிறது. இருப்பினும் இந்த பழத்தில் குளிர்ச்சி  அதிகம் என்பதால் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு இது தகுந்தது கிடையாது.

சீத்தாப்பழத்தின் சில உடல் நல பயன்கள் : 


உடல் எடையை குறைக்க உதவும். கர்ப்ப காலத்தில் சிசுவின் மூளை, நரம்பியல் அமைப்பு வளச்சிக்கு சீத்தாப்பழம் உதவுகிறது. சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமையாக இருப்பதால் அது மூச்சுக்குழாய் அழற்சி குறைந்து ஆஸ்துமா ஏற்படுவதை தடுக்கும். சீத்தாப்பழத்தில் உள்ள மெக்னீசியம் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். சீத்தாப்பழத்தில் தாமிரமும், டையட்டரி நார்சத்தும் வளமையாக உள்ளதால் இது செரிமானத்திற்கு நல்லது. சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீஷியம் இந்த இரண்டுமே உங்கள் உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். சீத்தாப்பழத்தில் இரும்புச் சத்து வளமையாக உள்ளதால் இரத்த சோகையை இது கட்டுப்படுத்தும்.

boldsky

Post a Comment

Previous Post Next Post