பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நெஞ்சுவலி வர இவைதான் காரணம்.!


இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோயாக நெஞ்சுவலி மாரிவிட்டது. முதியவர்கள் மட்டும்தான் நெஞ்சுவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால் சிறியவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. நெஞ்சுவலி ஏற்படாமல் தடுப்பதற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.

மது பழக்கம்.
இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். குறிப்பாக சில பெண்களும் இதற்கு அடிமையாகிவிட்டனர். புகை பிடித்தல், மது அருந்துதல், போதை உன்டாக்கும் பொருட்களை பயன்படுத்துதல் போன்ற பழக்கங்களினால் நெஞ்சுவலி ஏற்ப்பட காரணமாக அமைகிறது. இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.

உடல் எடை.
இன்றைய நாகரீக உலகில் உணவு பழக்கங்கள் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இன்னைய மக்கள் இயற்கையான உணவுகளை உண்பதை தவிர்த்து செயற்கையான நச்சுத்தன்மை வாய்ந்த உணவுகளை உண்பதில் ஆர்வர் செலுத்தி வருகின்றனர். இதனால் உடல் எடை அதிகரித்து பலவிதமான நோய்கள் மட்டுமல்லாமல் நெஞ்சுவலி ஏற்படுவதற்கும் காரனமாக அமைகிறது. இந்த வகை உணவு முறைகளை மாற்றினால் இந்த நோயினை தவிர்க்கலாம்.


உடல் பயிற்சி.
தினமும் காலையில் எழுந்த உடன் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது இது உடலுக்கு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. காலையில் தினமும் நடைபயிற்ச்சியும் தொடர்ந்து செய்யும் போது நெஞ்சுவலி ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மன அழுத்தம்.
நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்து கொள்ள வேண்டும். முடிந்த பிரச்சனைகளை நினைத்து யோசித்து மன அழுத்தத்தோடு இருக்ககூடாது. மன அழுத்தம் நெஞ்சுவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். எனவே மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கவேண்டும்.

உறக்கம்.
ஒவ்வொரு மனிதனும் சராசரியாக 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானது உறக்கம். இந்த உறக்கம் குறையும்போது பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. உழைக்கின்ற மனிதனுக்கு ஓய்வு என்பது மிக அவசியமான ஒன்று இந்த ஓய்வு இல்லாதவர்களுக்கு பலவித தோய்களும் ஏற்பட காரனமாகிறது.


Post a Comment

Previous Post Next Post