ஆடை அணிவது பற்றி இஸ்லாம் மிகத் தெளிவாக கற்றுத்தருகிறது.
ஆண்கள் முழங்காலுக்கும் தொப்புளுக்கும் இடையேயுள்ள மேனியை மறைப்பதும். பெண்கள் முகத்தையும் இரு மணிக்கட்டுகளையும் தவிர மற்ற மேனி முழுவதையும் மறைப்பது வாஜிபாகும். உடம்பை மேனி தெரியாத கெட்டியான துணியால் மறைத்திட வேண்டும்.
பெண்கள் தங்கள் (ஆடை ஆபரணம்) போன்ற தங்களின் அலங்காரத்தையும் வெளிப்படுத்த வேண்டாம்.
அல்குர்ஆன் 24:31
அல்குர்ஆன் 24:31
"அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதையும், இதையும், தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.
பெருமை கொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் கருணை பார்வை பார்க்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"ஆண்களைப்போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்தவர்கள் அல்ல" (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்,)
நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா, ஹாகிம்.)
ஒரு பெண் வெளியில் செல்லும் போது நறுமணம் பூசி செல்வது கூடாது, வீட்டில் தன் கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போது நறுமணங்களைப் பூசிக்கொள்வதில் தவறில்லை.
பெண்கள் தங்களின் அலங்காரத்தில் மறைந்திருப்பதை பிறருக்கு காட்ட பூமியில் கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம் எனக் கூறுகிறது அல்குர்ஆன்.
ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக்கொள்ள பர்தா ( ஹிஜாப்) அணிய வேண்டும்.
பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ளட்டும் என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்ட போது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். ( தடித்த, கம்பளி போன்ற ) கனமான துணிகளால் முந்தானைகளை தயாரித்துக்கொண்டனர் என ஆயிஷா (ரழியல்லாஹூ அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)
சில பெண்கள் ஒருமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை கவனித்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை பார்த்து பின்வருமாறு கூறினார்கள்.
உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவகளுக்குரிய ஆடை அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள். என்றார் ஆயிஷா (ரலி) அவர்கள்.
ஹிஜாப் என்பது பெண்கள் தமது கணவனுக்க்கு மட்டும் காட்டும் அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக்கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள மிகச் சிறப்பான பாதுகாப்பான உடை அமைப்பாகும்.
ஆடையில் கண்ணிமும் கட்டுப்பாடும் தேவை, அவை நமக்கு நற்பெயரை ஏற்படுத்தி தரும்.,
மேலும் பல தமிழ் குறிப்புகளை YouTube -ல் கான https://www.youtube.com/channel/UCs2PAjtEepRLcPPUWJHEm8Q?view_as=subscriber
Tags
இஸ்லாமிய குறிப்புகள்