சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வது எப்படி ??


சோலார் என்பது சூரிய ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றக்கூடியவை.
வருங்காலத்தில் மின்சாரத்திற்கான தேவையும் அதன் விலையும் அதிகரிக்கும். இந்த நிலையில் சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்வது நல்லது. நமது சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது.

* சோலார் ONGRID அமைக்க ஒரு முறை செலவு செய்துவிட்டால் அடுத்து 20 - 25 வருடங்களுக்கு அதற்கு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

* மின்சார கட்டணம் குறைந்த அளவு மட்டுமே செலுத்த வேண்டி வரும். 

* சோலார் மின் உற்பத்திக்கு ஆகும் செலவுகளில் 40% வரை அரசு மானியம் பெறலாம்.

* இது. அதிக அளவு கழிவுகளை உருவாக்காத பசுமை ஆற்றல். சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பனது. இதனால் தான் அனைவரும் சோலார் மின் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று  தமிழகஅரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.


* சோலார் மின் உற்பத்தி கருவிகளை பொருத்துவதற்கு அதிக இடம் தேடியலையத் தேவையில்லை. வீட்டுக்கூரைலேயே அதை பொருத்திவிடலாம்,

* இவை ஜெனெரேட்டர் போல எந்த சப்தமும் எழுப்பாது. மிக அமைதியாக செயல்படும் என்பதால் எந்த சொத்தரவும் இருக்காது.

* நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றது.

* வீட்டு தேவைக்கு மட்டுமல்லாமல் விவசாயம், தொழ்சாலை, வீயாபாரக் கூடங்கள், போன்ற அனைத்திற்கும் இதிலிருந்து பின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். (1 KW , 2 KW UP TO 500 MV) வரை.

* இந்த மின்சாரத்தில் அனைத்து வகையான மின் சாதனங்களையும் பயன் படுத்தலாம். (எ.கா TV, FRIDGE, AC, Etc...)


இது போன்ற வீடு முழுவதும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தவிரும்பினால் அதிகபட்சம் 2 லக்சம் செலவாகும் இதில் அரசு மானியம் 90. ஆயிரம் என்றால் மிச்சம் 1. 10,000. நாம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

குறைந்த செலவில் என்ன வழி :


பொதுவாக இன்றைக்கு பொரும்பாலும் பல வீடுகளில் இன்வெர்ட்டர் பொருத்தியிருக்கிறார்கள். மின்சாரம் இல்லாத நேரத்தில் இன்வெர்ட்டரை வைத்து சமாளித்து வருகின்றனர். ஆனால் அந்த இன்வெட்டரில் சேமிக்கப்படும் மின்சாரம் மின் வாரியம் மூலமாக நம் வீட்டிற்கு கிடைக்கும் மின்சாரம்தான். இதனால் நமக்கு எந்த லாபமும், இல்லை மிச்சமும் இல்லை. அதில் சேமிக்கப்படும் மின்சாரத்திற்கும் சேர்த்துதான் மின் கட்டணம் செலுத்துகிறோம் ,

சூரியத் தகடு மற்றும் அதற்கான சார்ஜ் கன்ட்ரோலர் இயந்திரம் ஆகிய இரண்டையும் மட்டும் வாங்கி மாட்டினால் நமது மின் தேவையில் ஒரு பகுதியை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக்கொள்ள முடியும். 
உலகிலேயே இந்தியாவில்தான் வரும் 300 நாட்கள் முழு அளவில் சூரிய ஒளிகிடைகிறதாம்..


சாதாரணமாக ஒரு வீட்டில் இன்வெர்ட்டர் வைக்கும்போது மின்சாரம் இல்லாதபோது 2 ஃபேன்கள், 3 லைட்டுகள், இவைகளை 3 அல்லது 4 மணிநேரம் இயங்குவது வைப்பது வழக்கம் இதற்கு ஒரு 150 எ.ஹெச் பேட்டரி மற்றும் 850 வி.ஏ இன்வெர்ட்டர் வைக்கப்படும்.   

சூரியத் தகடு வைக்க இரண்டு 150 எ,ஹெச் பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டராக மாற்ற வேண்டும் இதற்கு சற்று கூடுதலாக செலவாகும்.
1 கேவி சூரியத் தகடு பயன்படுத்த இந்த பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் போதுமானது. 1 கேவி என்பது 1000 வாட்ஸ். இந்த 1000 வாட்ஸ் பேனலில் தினந்தோறும் 5 யூனிட் வரை மின்சாரம் சேமிக்க முடியும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதால் 60 தினங்களுக்கு நாம் 300 யூனிட்கள் வரை மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

மேலும் பல தமிழ் குறிப்புகளை  YouTube -ல் கான https://www.youtube.com/channel/UCs2PAjtEepRLcPPUWJHEm8Q?view_as=subscriber

Post a Comment

Previous Post Next Post