உங்கள் வீட்டில் நீர் கசிவா ?


ஒரு வருடத்துக்கு முன்புதானே வீட்டைக் கட்டி முடித்தேன் அதற்குள் இப்படியா ! என்று வீடு கட்டிய நண்பர்கள் வருத்தப்படுகிறார்கள்,
உங்கள் வீட்டில் எங்கேயாவது நீர்க்கசிவோ அல்லது சுவர் ஈரமாகவோ பார்த்திருப்போம். வீட்டில் ஈரக்கசிவு தென்பட்டால் அதை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். இல்லை என்றால் பிறகு அதிகமாக செலவு வைத்துவிடும்.

கசிவு ஏற்படாமல் தடுப்பது எப்படி:-

பொதுவாக மழைக்காலங்களில் கான்கிரீட் மேற்கூரையிலேயே அதிக ஈரக் கசிவு ஏற்படும்.மேற்கூரையில் ஈரக் கசிவு ஏற்படாமல் இருக்க கான்கிரீட் போடுவதற்கு முன்பாக மணலை நன்றாக சலிக்க வேண்டும். ஆற்று மணலில் களிமண் கட்டிகள் கலந்தே வரும் களிமண்ணை கான்கிரீட் கலவையுடன் சேர்த்து கட்டினால் பாதிப்பு ஏற்படும். களிமண்ணின் ஈரத்தன்மை கான்கிரீட் வழியாக சுவருக்குள் இறங்கும்.

பெரும்பாலும் கான்கிரீட் மேற்கூரை போட்ட பிறகு மொட்டை மாடியில் தட்டு ஓடு எனப்படும் சுர்க்கி கல் பதிப்பது வழக்கம். இந்த ஓடுகள் நல்ல தரமானதாக இருக்க வேண்டும் .



மழையை நீர் மட்டும் இல்லாமல் குளியல் அறையில் ஏற்படும் ஈரத்துக்கு சுவருக்குள் இருக்கும் தண்ணீர் குழாய்களில் இருக்கு கசிவு அதற்கு காரனமாக இருக்கும். வீட்டில் சமயலறை, படுக்கையறை, சுவர்களில் ஈரம் தென்பட்டால் அதற்கு காரணம் தரமற்ற செங்கற்களைப் பயன்படுத்தியது..
எனவே செங்கற்கள் தரமானதாக இருக்க வேண்டும்.

தரமற்ற செங்கற்களைக் கண்டுப்பிடிக்கவும் வழி உள்ளது. செங்கல்லைப் பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நனைத்து பின்பு கட்டுமானத்திற்கு பயன்படுத்த வேண்டும். தரமற்ற கல்லாக இருந்தால் தண்ணீரிலேயே கரையும் அல்லது எடை அதிகமாக காணப்படும்.  எனவே நீர் கசிவுக்கு தரமற்ற செங்கல்லும் ஒரு காரணம்.

மொட்டை மாடியில் கான்கிரீட் போட்டபிறகு தட்டு ஓடு ஒட்டுவதற்கு முன்பு இன்னொரு வேலை செய்யவேண்டும். காங்கிரீட் போட்டபிறகு நீர்தடுப்பு சிமெண்ட் கலவையை சந்து பொந்து விடாமல் நன்றாக பூச வேண்டும். இது நீர் கசிவை தடுக்கும்.



தற்போது சந்தையில் நீர்க் கசிவைத் தடுக்கும் வகையில் ஏராளமான ரசாயன பேஸ்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவைகளை சுண்ணாம்பு பூசுவதைப் போல சுவரில் பூசலாம் இவை அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை மட்டும் தாக்குபிடிக்கும் பின்பு அதே பிரச்சனை தலைக்காட்ட தொடங்கிவிடும்.

பலர் இதனை சுலபமாக செய்யலாம் என்று நினைக்கலாம் ஆனால் சுவர்களில் ஏற்படும் நீர்கசிவை சிரி செய்வது அவ்வளவு சுலபமில்லை, எனவே வீடு கட்டும்போதே ஈரக்கசிவு வராதபடி தரமான பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

மேலும் பல தமிழ் குறிப்புகளை youtube-ல் கான https://www.youtube.com/channel/UCs2PAjtEepRLcPPUWJHEm8Q?view_as=subscriber

Post a Comment

Previous Post Next Post