* தாய்க்கு நன்றி செலுத்து !
அல்லாஹ்வையே வணங்குங்கள் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள் பெற்றோருக்கு நன்றி செலுத்துங்கள் என்கிறது (உலகப்பொதுமறை குர்ஆன் 17:23)
நபியே! உமது இறைவன் தன்னை தவிர மற்றெவரையும் வணங்கக்கூடாதென்றும் கட்டளையிடிருப்பதுடன் தன் தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (உலகப்பொதுமறை 17:8)
தனது தாய், தந்தைக்கு நன்றி செய்வது பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். அவன் பிறந்த பிறகும் இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். ஆகவே மனிதனே நீ எனக்கும் உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்தி வா (முடிவில் நீ என்னிடமே வந்துசேர வேண்டியதிருக்கிறது). ( உலக பொதுமறை குர்ஆன் 31:14)
* சிறந்த உறவு தாயே.
முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் இறைத்தூதரே நான் அழகிய முறையில் நடந்துகொள்ள மிகவும் தகுதியானவர் யார் ? என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமது "தாய் " என்றார்கள். பிறகு யார் என்று கேட்டார் " உமது தாய் " என்றார்கள். பிறகு யார் என்று கேட்டார் " உமது தந்தை " என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஆதாரம்: புகாரி )
* "சீ" என்று கூட சொல்லக்கூடாது.
என்னன தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.உம்முடன் இருக்கும் அவ்விருவருக்கு இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ" எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (உலகப்பொதுமறை குர்ஆன் 17:23)
* தாயின் காலடியிலே சுவனம்.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "தாயின் காலடியில் சுவனம் உள்ளது". தாயின் காலடியில் சுவர்க்கம் என்பது தாய்க்குக் கட்டுப்பட்டு மரியாதை கொடுத்து கண்ணியப்படுத்த வேண்டும் என்பதாகும்.
நம்மை பெற்றெடுத்த தாய்-க்கு நன்றி செலுத்தி இறைவனின் திருப்தியை பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.
by .K.A
Tags
இஸ்லாமிய குறிப்புகள்