பெண்களின் முகத்தில் வளரும் முடிகளை நீக்க சில டிப்ஸ்...!


பெண்கள் தன் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க பிளக்சிங், ஷேனிங், வேக்கிங் போன்ற முறைகளையும் முடியினை வேரோடு நீக்க நவீன மருத்துவ சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர். ஆனால் இதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவே இயற்கையான முறையில் முகத்தில் வளரும் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்க சில டிப்ஸ்.

சில பெண்களுக்கு ஆண்களைப்போல மீசை வளர்வதுண்டு அதனை தடுக்க அப்பர் லிப்ஸ் எடுப்பார்கள். அப்பர் லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலி ஏற்படும். இதனை தவிர்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்து பயன்படுத்தினால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியையை போக்கலாம்.


முக்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தடவினால் முடி வளர்ச்சியை தடுத்து முகம் அழகு பெறும்.

எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்குகிளரி தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது தடவி பின் ஸ்கரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான சருமத்தை பெறலாம்.

கடலை மாவில் சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அதனை முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்.

ஓட்ஸை பொடி செய்து அத்துடன் தேன் மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து கலந்து சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால் பொலிவான சருமத்தையும் அழகான முக அழகையும் பெறலாம்.

மஞ்சளை பப்பாளியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி உலர வைத்து பின்பு 15 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரினால் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். 

மேலும் பல தமிழ் குறுப்புகளை YouTube -ல் கான https://www.youtube.com/channel/தமிழ்குறிப்புகள்.view_as=subscriber

Post a Comment

Previous Post Next Post