கர்ப்பம் தரித்த பின் ஒவ்வொரு பெண்ணிற்கும் அது உணர்வுப்பூர்வமான நேரம்தான். நமக்கு என்ன குழந்தை பிறக்கும், நமக்கு ஏதாவது நேருமா என பல விதமான அச்சம் அடைவார்கள். அப்படி அச்சம் அடையதேவையில்லை. மருத்துவரின் அறிவுரையின் படி நடந்து சரியான நேரத்திற்கு உணவருந்தினாலே இயல்பாய் எந்தவித சிரமமின்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்.
கர்ப காலத்தில் செய்ய வேண்டியவை.
* கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்தும், போதிய ஓய்வும் அவசியம்.
* கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிக்கும் குழந்தைக்கு அவசியம்.
* படுக்கும் போது உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்கவேண்டும்.
* எதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை.
* மல்லாந்து படுப்பதை தவிர்க்கவும்.மல்லாந்து படுக்கும் போது இரத்தக்குழாய் அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறைவு ஏற்படலாம்.
* கர்ப்பிணிகள் எக்காரணத்தைக் கொண்டும் குப்புற படுக்ககூடாது.
* உறங்கும் போது தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும்.
* தூங்கும்போது வசதியான தலையணையை வைத்து தூங்குவது நல்லது.
* கர்ப்பிணி பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
* கர்ப்பிணிகள் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும்.
* தினமும் சிறிது நடைபயிற்ச்சியும் நல்லது.
குறிப்பு :
கர்ப்பிணிகள் உங்கள் உடல்பற்றி ஏதேனும் சந்தேகம் மற்றும் இரத்தம் மற்றும் நீர் கசிதல், கை கால் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம், வயிற்று வலி அல்லது அதிக தலைவலி போன்ற அறிகுறிகள் வந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அனுகவேண்டும்.
தகவல் : திரட்டப்பட்டது. by . K.A
மேலும் பல தமிழ் குறிப்புகளை YouTube -ல் கான https://www.youtube.com/channel/UCs2PAjtEepRLcPPUWJHEm8Q?view_as=subscriber
Tags
பொது குறிப்புகள்.