கணவன் மனைவி உறவு என்பது வாழ்நாள் வரை நம்முடன் பயனிக்கும் ஒரு உன்னதமான உறவு. அந்த உறவில் நாம் இருமனங்களும் பாசத்துடனும் அன்புடனும் இருக்க சில வழிகள்.
* இருவரும் ஏதாவது விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள்,
* எதிர்பாராத அணைப்பு, முத்தம், போன்றவை இருவரையும் அன்பு வலைக்குல் சிக்க வைக்கும்.
* ஒருவர் ஏதாவது விஷயத்தை சொல்லத் தொடங்கும் போது மற்றவர் காதுகொடுத்து கேட்கவேண்டும்.
* ஒருவரது குறையை எந்த சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டு பேசக்கூடாது .
* தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது மற்றவர் தொந்தரவு செய்யக்கூடாது.
* தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
* கணவன் மனைவி இருவரும் மற்றவரிடம் தன் துணையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவேண்டும்.
* பிறந்த நாள், திருமணநாள் போன்ற முக்கிய நாட்களை துணையிடம் கூறி அன்புச் செலுத்துங்கள்.
* ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
* தன் துணையிடம் நீ எனக்கு என் வாழ்வில் அவ்வளவு முக்கியம் என்பதை துணைக்கு உனரச் செய்யுங்கள்.
* கணவன் மனைவி தன் துணையை அன்புடன் அழைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
* ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையை ருசித்து வாழ வாழ்த்துக்கள்.
Tags
உறவு