மறைத்து வைக்கப்படும் கேமராக்கள் சிக்கித் தவிக்கும் பெண்கள் !!


உணவு விடுதியின் கழிவறைக்கு சென்ற பெண் அங்கு ஒரு கைபேசி மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்சியடைந்தார் அந்த கைபேசியில் கேமரா இயங்கிக் கொண்டிருந்தது அதை அந்த பெண் ஆராய்ந்து பார்த்ததில் அதில் வேறு சில பெண்களின் வீடியோப் பதிவுகளும் இருந்தன அவை அனைத்தும் வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அந்த கைபேசி அங்கு பணியாற்றும் துப்பரவு பணியாளர் ஒருவருடையது என்பது தெரியவந்தது.



அன்மை காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொது கழிவறை, ஓய்வு அறை, உடை மாற்றும் அறை, குளியலறை, மற்றும் ஹோட்டல் அறை என பல இடங்களில் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு வீடியோப் பதிவு செய்யப்படுகிறது, இது போன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்புகுறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.




பெண்கள் பொதுக்கழிவறை, உடை மாற்றும் அறை , ஹோட்டல் அறை, போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது அப்படி தவிர்க்க முடியவில்லை என்றால் அந்த அறைகளை பயன்படுத்தவதற்கு முன்னால் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.




கேமராக்கள் ரகசியமாக வைக்கப்படும் இடங்கள் :-

* கண்ணாடியின் பின்புறம்,
* கதவுகள்,
* சுவரின் ஏதாவது ஒரு பகுதி,
* அறையின் மேற்கூறை,
* மின் விளக்குகள்,
* புகைப்பட சட்டங்கள்,
* பூ ஜாடி மற்றும் பூச்செண்டுகள்,

இன்னும் பல இடங்களிலும் சிறிய வகை கேமராக்கள் பொருத்தப்படலாம்.

ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி :-



ரகசியமாக மறைத்து வைக்கப்படும் கேமராக்கள் அளவில் மிகச் சிறியதாகவும் கண்களில் சாதாரனமாக கானமுடியாதபடியும் இருக்கும் அதில் உங்களின் அனைத்து செயல்படுகளும் தெளிவாக பதிவாகும்.

சோதித்து பார்க்கவும் ஒரு அறைக்கு துணி மாற்ற செல்லும்போது அங்கு உள்ள பொருட்களை ஆராய வேண்டும் அறையின் மேற்கூறையில் ஏதாவது சிறிய பெரிய பொருட்கள்  இருக்கிறதா என்பதை கவனிக்கவும்.

கதவு, சுவர், மேற்கூறை, போன்றவற்றில் துளை ஏதேனும் உள்ளதா என்று கவனிக்கவும் அப்படி துளை இருந்தால் அதில் ஏதாவது வைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.

அறைகளுக்கு செல்லும்போது மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு அறையை முழுமையாக கவனித்து பார்க்கவும் LED விளக்கு ஒளி இருப்பது தெரிந்தால் அது கேமராவாக இருக்கலாம் ஏன் என்றால் இருளிலும் செயல்பாடுகளை பதிவு செய்ய கேமராக்களுக்குள் LED விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.




கண்ணாடி அறைகளுக்கு செல்லும்போது கண்ணாடியின் சட்டங்கள் கதவின் பின்புறம் இவைகளை சோதனை செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும். பொது இடங்களில் பயன்படுத்தப்படும் கழிப்பறைகள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள், உடை மாற்றும் அறைகள், போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகள் மூலம் நம்மை மற்றவர்கள் பின்புறத்தில் இருந்து பார்க்க இயலும்.

அப்படிப்பட்ட கண்ணாடிகளை கண்டறிவது எப்படி :-

* உங்கள் கைவிரலின் நகத்தினை எதிரே இருக்கும் கண்ணாடியின் மீது வைக்கவும்.

* அவ்வாறு வைக்கும்போது உங்கள் கைவிரலின் நகத்திற்கும் கண்ணாடியில் தெரியும் நகத்திற்கும் ஒரு சிறிய இடைவெளி இருந்தால் அது ஒரு வழியாக (அதாவது நாம் மட்டும் பார்க்ககூடிய கண்ணாடி) இதில் எதிர்புறம் இருந்து யாராலும் பார்க்க முடியாது.

* மாறாக உங்கள் கை விரலின் நகத்திற்கும் கண்ணாடியில் தெரியும் நகத்திற்கும் இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டால் சந்தேகமே வேண்டாம் நிச்சயம் அது இருவழி கண்ணாடியாகும் இதில் பின்புறம் இருந்து யார் வேண்டுமானாலும் நம்மை பார்க்கஇயலும்.,




உங்களுக்கு ஒரு அறையில் இருப்பது கேமரா என உறுதியாக தெரியவில்லை இந்தாலும் சந்தேகம் என்றால் அதை துணி அல்லது ஏதாவது பொருளைகொண்டு மறைத்துவிடுங்கள் அது உங்களுக்கு சிறு பாதுகாப்பினை தரும். 

எனவே பெண்கள் பொதுஅறைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும்.

இந்த தகவலை உங்கள் சகோதரிகள், மனைவி, மகள்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் , ஆகியோரிடமும் இந்த தகவலை பகிந்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்

 by .K.A

Post a Comment

Previous Post Next Post