தினம் தினம் உணவில் தயிர் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!


தயிரில் பலவிதமான நன்மைகள் அடங்கியுள்ளது. நம்முடைய தினசரி வாழ்க்கையில் தயிரை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமிகள் வளர்ச்சியை தடுக்கிறது.

* தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்மை தரக்கூடிய பாக்டீரியாவை உருவாக்குகிறது.

* வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டும் உணவாக உட்கொள்வது நல்லது.


* அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் போது வெந்தயம் மற்றும் தயிர் ஒரு கப் சாப்பிட்டால் வயிட்றுப்போக்கு அடங்கும். 

* வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் நல்ல வாசமாக இருக்கும்.

* பொடுகை நீக்க தயார் சிறந்த தீர்வாக இருக்கும். தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும் பொடுகு தொல்லை நீங்கும்.பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால் பொடுகை நீக்க இது உதவும்.


* புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

* தயிர் இரண்டு மூன்று நாள் புளிக்காமல் இருக்க தேங்காய்  துண்டை சிறிது சேர்த்தால் புளிக்காது.

* நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.

* தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று அவை பற்களுக்கும் எலும்புகளுக்கும் நல்லது. 


* மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை சாதத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் நல்ல பயனை தரும்.

Post a Comment

Previous Post Next Post