நன்கொடைகளைப் பற்றிகூறும் இஸ்லாம் !!


அன்புப் பரிசு:-

ஸலீம் இப்னு முதிர் (ரஹ்) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிப்பதாவது "நபி (ஸல்) அவர்களின் திண்ணைப் பள்ளி மாணவர்களான ஸுஃப்பா வாசிகளில் சிலருக்கு நான் எழுதவும் குர்ஆன் ஓதவும் கற்றுக்தொடுத்தேன் .எனவே அவர்களில் ஒருவர் எனக்கு வில் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

உமர் (ரலி) அவர்கள் என்னை ஜகாத் வசூலிக்கும் பொருப்பாளராக நியமித்தார்கள். நான் வசூலித்து வந்ததும் எனக்குச் சம்பளம் வழங்குமாறு கூறினார்கள். அப்பொழுது நான் " அல்லாஹ்வுக்காக இந்த வேலையைச் செய்தேன், எனவே எனது பிரதிபலனை அல்லாஹ்விடம் எதிர்பார்க்குறேன் " என்று கூதினேன்.

அதற்கு அவர்கள் " நான் கொடுப்பதை ஏற்றுக்கொள் ஏனெனில் நான் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஜகாத் வசூலிக்கும் பொருப்பு வகித்திருக்கிறேன் . அப்பொழுது எனக்கு அதற்கான ஊதியம் வழங்கப்பட்டது (அப்பொழுது ) நானும் உம்மைப் போன்றே கூறினேன். அதற்கு நபிகளார் என்னிடம் " நீங்கள் கேட்காமல் நானாக எதும் உமக்கு வழங்கினால் அதனை நீர் உண்ணலாம், தர்மம் செய்யலாம் " என்று கூறினார்கள். மக்களே நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் (நன்கொடை நன்கொடையாக இருக்கும் வரை  ) என நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.   
அபூதாவூத் 527


அன்பளிப்பை மறுக்காதீர் :-

ஒரு சமயம் உமர் (ரலி) அவர்களுக்கு ஓர் அன்பளிப்பு கொடுக்கப்பட்டது அதனை அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள். பிறகு நபிகளார் அதனை கேள்விப்பட்டு அதனை பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார்கள். உடனே உமர் ( ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அன்பளித்தவர் என்னைவிட ஏழை என்று சொன்னார்கள் அதற்கு நபிகளார் உமக்கு எவரேனும் ஏதேனும் அன்பளிப்புகள் கொடுத்தால் பெற்றுக்கொள்வீராக ! நீர் அதனை வீணடிப்பவறுமல்ல, நீர் அதனை கேட்டு பெறவும் இல்லை எனவே அதனை ஏற்றுக்கொள்வீராக! எனக் கூறினார்கள்.

நூல் : முஸ்னது அஹ்மத் 528

Post a Comment

Previous Post Next Post