சாலையில் பாதுகாப்பான பயண வழிமுறைகள் !


வாகனம் என்பது நம்முடைய தேவைக்காக பயன்படுத்தக்கூடியது அதனை சரியாகவும் பாதுகாப்புடனும் நாம் கையாண்டால் அதிக விபத்துக்களை குறைக்கலாம்.

வழிமுறைகள் :-

* வாகனங்களில் உட்கார்த உடனே கார் கதவை சரியாக மூடவேண்டும்.

* முன்புறமுள்ள  டிரைவர் மற்றும் பயணி ஆகிய இருவரும் சீட் பெல்ட் போடவேண்டும்.

* சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

* சாலை விதிகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.


* சாலை என்பது அனைவருக்குமானது. உங்களுக்க்காக மட்டும் சாலை போடப்படவில்லை யாரேனும் வாகனத்தில் வேகமாக வந்தால் அவருக்கு வழி விட்டு விடவும் அது நமக்கும் நல்லது.

* 14 வயதிற்குற்பட்ட குழந்தைகளை முன்புற இருக்கையில் அமர அனுமதிக்கக்கூடாது.

* ஒவ்வொரு நாளும் பயணத்தை தொடங்கும் முன்பு சக்கரங்களின் காற்றை சரிபார்க்க வேண்டும்.

* இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்.

* தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது கூடாது.

* அளவுக்கு அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தக்கூடாது.

* முன்புறம் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவேண்டும்.

* மிக முக்கியமானது எந்த வாகனத்தை ஓட்டும்போதும் நிதானம் மிக மிக அவசியம்.

நன்றி.
by . K.A

Post a Comment

Previous Post Next Post