புதுமண தம்பதியருக்கு என்ன பரிசளிக்கலாம் ?


பரிசு இல்லாமல் திருமண நிகழ்வு நிறைவடைவதில்லை. அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்துபவை இந்த பரிசு பொருட்கள், ஏதோவொரு பரிசு என்று கடைமைக்காக கொடுக்காமல் நம் நினைவாக இருக்கும்படியான பரிசுப்பொருட்களை வழங்கவேண்டும்.

குறைந்த செலவில் உள்ள பரிசாக இருந்தால் தனி நபராகவும் அதிக செலவில் உள்ள பரிசாக இருந்தால் குழுவாகவே இணைந்து பரிசுகளை வாங்கிகொடுத்து தம்பதியரை வாழ்த்தலாம். அதற்கான சில ஆலோசனைகள் இதில் ....


திருமணத்தில் பரிசு பொருட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்கள், போட்டோ பிரேம்கள், நைட் லேம்ப்கள், போன்ற பரிசுப் பொருட்களை அதிகமாக அளிக்கப்படுவதை பார்க்கறோம் அது போன்று உங்கள் திருமணத்தில் உங்கலுக்கே வந்திருக்கலாம் ஒரே பொருள் தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் இருந்தால் அது பயன்படுத்தப்படாமல் வீணாகவே போகும்.

என்ன வாங்கி கொடுப்பது?

* கிப்ட் வவுச்சர்கள் :-

தம்பதியர் அவர்களுக்கு பிடித்த அல்லது தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள உதவும் வகையில் பிக் பஜார், போன்ற அங்காடிகளில் அல்லது அமேசான், பிளிப்கார்ட், போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் கிப்ட் வவுச்சர்களை வாங்கி பரிசளிக்கலாம் அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

* வீட்டு உபயோகப் பொருட்கள் / பர்னிச்சர்ஸ் :-

மின்னணு சாதனங்கள் இல்லாமல் தினசரி வாழ்க்கை இல்லை . டிவி, ஹோம் தியேட்டர், பிரிஜ், இண்டக்சன் குக்கர், மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை பரிசளிக்கலாம்.

* அலங்காரப் பொருட்கள் / அணிகலன்கள் / நறுமண பொருட்கள் :-

உங்களுக்கு தம்பதியர் முன்பே நன்கு தெரிந்திருந்தால் அவர்களுக்கு பிடித்த கை கடிகாரம், பிரேஸ்லெட், மோதிரம், ஆடைகள், அழகு பொருட்கள் , வாசனை திரவியங்கள் போன்றவற்றை தம்பதியருக்கு இருவருக்கும் பொருத்தமானதாக வாங்கி பரிசளிக்கவேண்டும்,

கிச்சன் பொருட்கள் :-

தினம் தினம் பயன்படுத்தும் பொருட்கள் இருக்கும் இடம் சமயல் அறை. அவற்றிற்கு தேவையான சமயல்சாதன பொருட்களை வாங்கி தம்பதியருக்கு பரிசளிக்கலாம்.

பயனில்லாத பொருட்களை பரிசாக வழங்குவதை தவிர்த்து தம்பதியர் பயன்படுத்தும் வகையில் பரிசுகளை வழங்குங்கள் அவை உங்களின் நினைவை தம்பதியருக்கு ஏற்படுத்தும்.

by . K.A

Post a Comment

Previous Post Next Post