கேரளா ஸ்பெஷல் குழாய் புட்டு செய்யத் தெரியுமா ?


இயற்கையின் பேரழகு கொட்டிக் கிடக்கும் கேரளத்தின் ஸ்பெஷல் உணவு என்றால் குழா புட்டு. கேரளத்தின் பாரம்பரிய சுவைகொண்ட புட்டு நீங்கள் வீட்டிலேயே சுவைக்க.....



கேரளாவில் உணவில் அதிக அளவில் சேர்க்கப்படும் பொருள் தேங்காயும், தேங்காய் எண்ணையுமே சுவைக்கு காரணம் , கேரளாவில் ஸ்டீல், மூங்கில், தேங்காய் ஓடு போன்றவை கொண்டு புட்டு தயார் செய்யப்படுகிறது. குழாப்புட்டு செய்வதற்கான ஸ்டீல் அச்சு கடைகளில் சாதாரணமாக கிடைக்கிறது.



மூங்கில், தேங்காய் ஓட்டினுள் இலை வைத்து அதில் மாவு நிரப்பி தயார் செய்யப்படும் புட்டின் சுவைக்கு ஈடுஇல்லை.

தேவையான பொருட்கள் :-

அரிசி மாவு                    : 1 கப்
தேங்காய் துருவல்    :  அரை மூடி
உப்பு                                 :  தேவையான 
                                                           அளவு ஏலக்காய்                     :   2 

செய்முறை :-

ஒரு பவுலில் மாவு, உப்பு, இடிச்ச ஏலக்காய் ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்,

மாவு அதிக கெட்டியாகவோ அல்லது அதிக தண்ணீர் பதத்துடனோ மாறிவிடக்கூடாது, சரியான ஈரப்பதத்துடன் மாவு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்,

பின்பு சிறது தேங்காய் துருவலை புட்டு குழாயில் சேர்க்கவும் பின் பாதியளவுக்கு மாவு சேர்க்கவும் பின்பு மீண்டும் தேங்காய் துருவலை சேர்க்கவும் பின்பு மாவு இருதியாக தேங்காய் துருவல் சேர்த்து குழாயை இருக்கமாக மூடி ஆவியில் வேகவிடவும்.



பின்பு புட்டு குழாயிலிருந்து வேகமாக ஆவி வெளியேறும் அதாவது ஐந்து முதல் பத்து நிமிடங்களில் கேரளா ஸ்பெஷல் குழாப்புட்டு தயாராகிவிடும்.,

Post a Comment

Previous Post Next Post