திருமணம் என்பது இரு உல்லங்களுக்கு உண்டாகும் புதிய உறவுமுறை திருமணம். திருமணம் என்பது பொதுவாக பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது காதல் திருமணமாக இருக்கலாம் அது இணையும் இதயங்களை பொருத்தது.
தன்னை நேசிப்பதற்கும் , காதலிப்பதற்கும், கவனிப்பதற்கும், வாழ்க்கை முழுவதும் உடனிருப்பதற்கும் ஒரு துணை வேண்டும் என்பதற்காகதான் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்துகொள்கின்றனர்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று முன்னோர்கள் கூறியதற்கு பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு, உள்ளிட்ட பயிர்களை எடுத்துக்கொண்டால் அவை குறிப்பிட்ட காலத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும் .ஆனால் திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும் பிரச்சனைகளை சமாளித்து மகசூல் கொடுக்கும் பயிர் என்று அர்த்தம்.
கணவன் மனைவி இருவரும் தங்களின் உல்லங்களில் உள்ளவற்றை தங்கள் துணையிடம் வெளிப்படையாக பகிர்ந்துக் கொண்டால் பல பிரச்சனைகளை தவிர்க்கமுடியும். சில நேரங்களில் மனைவியை கணவனும் கணவனை மனைவியும் கட்டி அனைப்பது மற்றும் முத்தமிடுவதன் மூலம் அதிக அன்பு இருவருக்கும் பரிமாரப்படுகிறது இதனால் இருவருக்கும் உள்ள இணைப்பு அதிகமாகும்.
திருமணத்தின் போது எப்படி அன்பும் பாசமும் இருந்ததை போன்று கடைசிகாலம் வரை அது குறையாமல் சிதராமல் இருக்கவேண்டும்.
தாய் -க்கு பிறகு தாரம் என்பார்கள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, தாயை போல் நம் துணையை பாதுகாக்க வேண்டும்.
கணவன் மனைவி அன்பு என்பது திருமணம்ஆன அனைவருக்கும் அது கிடைப்பதில்லை, காரனம் சகிப்புத்தன்மை இல்லாததுதான் காரனம் விட்டுக் கொடுக்காதது. "விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை" என்பார்கள் தன் துணையிடம் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அதிகம் அதிகம் அன்பு செலுத்துங்கள் அது உங்கள் வாழ்க்கையை சிறப்படைய செய்யும்.
Tags
உறவு