அழகை அதிகரிக்கவும் மற்ற சாதரன பயன்பாட்டிற்கும் காஸ்மெடிக் பொருட்களை வாங்கும்போது அவை சருமத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும் சிறந்த தயாரிப்பாக இருக்கவேண்டும் என்றெல்லாம் பார்த்து வாங்கும் நாம் அவற்றில் உள்ள குறியீடுகளை கவனித்து வாங்குகின்றோமா ?
குறியீடுகள் என்ன சொல்கின்றன.
தீ சுவலை :
நெருப்பு பற்றி எரிவது போன்ற குறியீட்டை பல காஸ்மெடிக் பொருட்களில் பார்த்திருப்பீர்கள் அதன் அர்த்தம் அந்த பொருள் எளிதில் தீப்பற்றக்கூடியது என்று அர்த்தம். டியோட்ரன்ட், ஹேர் ஸ்ப்ரே , பாடிஸ்ப்ரே, நெயில் பாலிஷ், நெடில் பாலிஷ் ரிமூவர், டிரை சாம்பு, சன் ஸ்கிரீன், மற்றும் பல பொருட்களில் இந்த குறியீடுகள் காணப்படும்.
மூடி திறப்பது :
இந்த குறியீடு அந்த பொருள் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து அதன் காலாவதி காலம் தொடங்குகிறது என்பதை குறிக்கும். அதாவது 6M என்று இருந்தால் அந்த காஸ்மெடிக் பொருளை திறந்து பயன்படுத்த தொடங்கிய நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் அதை பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம். இவ்வாறு 12M , 30M என பொருட்களுக்கு ஏற்றவாறு குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஹவர் கிளாஸ் :
இது "Best before" என்கிற காலாவதியாகக் கூடிய தேதியைக் குறிப்பிடுகிறது. அதாவது அந்த பொருளின் தன்மையும் வீரியமும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குதான் கெடாமல் அல்லது குறையாமல் இருக்கும் அதற்குள் அதை பயன்படுதிவிடுவது நல்லது.
புக்லெட் :
இந்த குறியட்டின் நோக்கம் அந்த பொருளின் கூடுதல் தகவல்கள் கொண்ட புக் ஒன்று அதில் இருக்கும் அதில் அந்த பொருளின் மூலப்பொருள் பற்றிய தகவல் அல்லது அதை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதற்கான குறிப்புகள் அல்லது எச்சரிக்கை என எதுவாகவும் இருக்கலாம்.
மறுசுழற்சிக் குறியீடு :
வீட்டில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் இந்த குறியீட்டை காணமுடியும் அதன் அர்த்தம் அந்தபொருளின் கொள்கலன் (டப்பா) மறுசுழற்ச்சிக்கு உகந்தது என்பதுதான். சில குறியீடுகளின் பக்கத்தில் எண்கள் சதவீத அடிப்படையில் போடப்பட்டிருக்கும் அதன்பொருள் மறுசுழற்ச்சி செய்யப்பட்டதிற்கான மூலப்பொருளின் சதவீதத்தை குறிக்கும். சதவீதம் இல்லாமல் வெறும் அந்தக்குறியீடு மட்டும் இருந்தால் அது மறுசுழற்சி செய்ய தகுந்தது என அர்த்தம்.
இயற்கை அழிவிற்கு முற்றுப்புள்ளி:
ஒரே ஒரு அம்புக்குறி வட்டத்திற்குள் இருப்பது போன்ற குறியீட்டை நீங்கள் சில பொருட்களில் பார்த்திருக்கலாம் ஆனால் அதன் அர்த்தம் தெரியாமல்
கடந்திருப்பீர்கள். அதன் அர்த்தம் ஒரு நிறுவனம் இயற்க்கைக்கு ஏதிராக செய்யும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு ஏதேனும் ஈடு செய்யவேண்டும் ஆதனால் இயற்கையான மறுசுழற்சி உதவி, மரம் நடுதல், என இயற்கையை பேணிக்காப்பதற்கான செயல்களை செய்ய வேண்டும் அவ்வாறு அந்நிறுவனம் செய்திருந்தால் அந்த குறியீட்டை தனது தயாரிப்பில் பொறிக்கும்.
முயல் குறியீடு:
பொதுவாக காஸ்மெடிக் பொருட்கள் அலர்ஜி போன்ற காரணங்களுக்காக விலங்குகளின் மீது சோதனை செய்தபிறகே அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு அளிப்பார்கள். ஆனால் சில நிறுவனங்கள் அதை தவிற்கின்றன அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தாத நிவனங்கள் தயாரிப்பு செயல்முறையில் விளங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை குறிக்க இந்த குறியீடு பயன்படுதுகின்றனர்.
USDA ஆர்கானிக் :
இந்த குறியீடு 95% ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டவை என்பதை உணர்த்தும் குறியீடாகும் அமெரிக்க தயாரிப்பு காஸ்மெடிக் பொருட்களில் இதை அதிகம் கானலாம்.
Tags
பயனுள்ள தகவல்