பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள்..


இன்றைய காலத்தில் பெண்பிள்ளைகள் வீட்டில் தனியாக இருந்தாலும் வெளியில் சென்றாலும் அவர்களை நினைத்து பெற்றோர்களுக்கு பதட்டம் ஏற்படுகிறது. வீட்டிலும் வெளியிலும் சீரழிவுக்கான சாத்த்தியங்கள் நிறைந்து கிடக்கும்போது அவர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது பெற்றோரின் கடமையாகும்.


பெற்றோர்கள் வளரும் இளம் பிள்ளைகளை எப்போதுமே கண்காணித்துக்கொண்டே இருக்க முடியாது அதை பிள்ளைகளும் விரும்புவதில்லை, எதை சொல்லித்தருகிறோமோ இல்லையோ ஆபத்தான நேரங்களில் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லிவளர்க்க வேண்டும்.



தெருவில் பாதுகாப்பு :

* பிள்ளைகள் இரவில் தனியாக வீட்டுக்கு பயணம் செய்யும்போது வெளிச்சமான , ஆள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான பாதையை தேர்த்தெடுக்க சொல்லவும்.

* பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் எப்போது திரும்பி வருகின்றனர் என்ற தகவல் வீட்டில் உள்ள ஒருவருக்காவது தெரிந்திருக்க வேண்டும்.



* இரவில் அதிகமாக பயணம் செய்வதை குறைத்துக்கொள்ளவும்.

* மொபைல் போன்  இருப்பது நல்லது அதில் ஹெல்ப்லைன் எண்களை பதிவுசெய்து வைத்துக்கொள்ள சொல்லுங்கள் அவசர நேரத்தில் உதவியாக இருக்கும். 

* நம்பிக்கை இல்லாத அல்லது பழக்கமில்லாத நபர்களுடன் பயணம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்துங்கள்.


* இரவில் நடந்து செல்லும்போது மொபைலையே பார்த்தபடி நடக்காமல் எச்சரிக்கையாக யார்  நம்மை கவனிக்கிறார்கள் யார் பின்தொடர்கிறார்கள் என்பதை கவனித்து நடக்க வேண்டும் .

* பாதுகாப்பு அலாரம், பெப்பர்ஸ் ஸ்ப்ரே, பாதுகாப்பு கீ செலின், போன்ற தற்காப்பு உபகரணங்களை பெண்பிள்ளைகள் பயணம் செய்யும்போது தங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளலாம்,

பள்ளியில் பாதுகாப்பு :

* சக மாணவர்கலோ, ஊழியர்கலோ அச்சுறுத்தல், மிரட்டல் போன்றவை நடந்தால் உடனுக்குடன் பெற்றோர்களிடம் தெரியப்படுத்த சொல்லுங்கள்.

* பள்ளியை விட்டு வெளியோறும் போது பாதுகாப்பான பாதையை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும்.


* அந்நியர்களிடம் லிஃப்ட் கேட்பதை தவிற்கவேண்டும் என்று கூறுங்கள்.

* பள்ளி தொடங்கும் முன்பு அல்லது முடிந்த பின்பு யாரும் இல்லாத நேரங்களில் தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும் ,

வீட்டில் பாதுகாப்பு :

* வீட்டில் பிள்ளைகள் தனியாக இருக்கும்போது அறிமுகமில்லாதவர்கள் வீட்டிற்கு வந்தாலோ அல்லது தொலைப்பேசியில் அழைத்தாலோ தனியாக இருப்பதை காட்டிக்கொள்ள கூடாது.


* விட்டில் தனியாக இருக்கும்போது கதவும், ஜன்னலும் எப்போதும் பூட்டி இருப்பது நல்லது.

* உறவினராக இருந்தாலும் நண்பர்கள் மற்ற யாராக இருந்தாலும் தவரான கண்ணோட்டத்தில் பார்ப்பது, பாலின உறுப்புகளை தொட முயற்சி செய்தார்கள் என்றால் மறைக்காமல் பயப்படாமல் பொற்றோர்களிடம் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்று பிள்ளைகளுக்கு வலியுறுத்தவேண்டும்.


* வீட்டிற்குள் தெரியாத நபர்களை அனுமதிக்கவேண்டாம் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும்.

வலைதளங்களில் பாதுகாப்பு :

* பெண் பிள்ளைகளை அதிகம் நேரம் சமுகவலைதளங்களை பயன்படுத்த அமைதிக்காதீர்கள் அதன் பாதிப்புகளை அன்பாக சொல்லவேண்டும்.
* பிள்ளைகளின் செல்போனில் உள்ள பிரவுசிங் ஹிஸ்ட்ரியை பெற்றோர்கள் பார்ப்பதில் தவறில்லை.


* பிள்ளைகள் இணையத்தில் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதன் தீமைகள் பற்றி அமைதியாக அறிவுறுத்துங்கள்.

* முகவரி, இருப்பிடம், பெயர், வயது, தொலைபேசி எண் , போன்ற தனிப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பகிராதீர்கள் என அறிவுத்துங்கள்.

* பிள்ளைகளின் சமூக வலைதளங்கனின் பக்கங்களில் குடும்ப உறுப்பினர் ஒருவர் இருப்பது நல்லது.



குறிப்பு.
பெண்பிள்ளைகளுக்கு வீட்டில் தனி அறைகொடுப்பது மிகப்பெரிய தவறு.

நன்றி.

Post a Comment

Previous Post Next Post