மாதுளம் பழம் :
ஆண்மையை பெருக்க பழங்களில் மிக முக்கியமானது மாதுளை, தினமும் இரவில் மாதுளை சாப்பிட்டுவந்தால் ஆண்மை குறைவு நீங்கும்.
அரச விதை :
அரச மரத்தின் பழ விதையை தூள்செய்து சாப்பிட்டால் ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
அத்திப் பழம் :
அத்திப்பழத்தை முறையாக 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
முருங்கை கீரை :
முருங்கை மரத்தின் கீரை, காய், பூ, பிசின் என அனைத்துமே ஆண்மை அதிகரிக்க உதவும் மருந்தாக உள்ளது .
பேரிச்சம் பழம் :
பேரிச்சம் பழம் உடலுக்கு இரும்புச் சத்தினை தருகிறது மற்றும் இது ஆண்மைக்கு முக்கிய மருந்தாகும். பேரிச்சம் பழத்தை ஆட்டுப்பாலில் கலந்து இரவு ஊரவைத்து காலையில் சாப்பிட்டுவந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
வாழைப் பூ :
வாழைப்பூவை பருப்புடன் சேர்த்துசமைத்து அதனை உண்டு வந்தால் உடல் வலிமையோடு ஆண்மையும் பெருகும்.
சுரக்காய் விதை :
சுரக்காயின் விதையை பொடி செய்து கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரையை சேர்த்து தினமும் 10 கிராம் உண்டுவந்தால் ஆண்மை அதிகரிக்கும் .
அமுக்கிரா கிழங்கு :
அமுக்கிரா கிழங்குடன் பாதாம் பருப்பு, கசகசா, சாரா பருப்பு சேர்த்து சாப்பிடுவதால் ஆண்மை பெருகும்.
தர்பூசணி :
தர்பூசணிப்பழத்தில்
லைசோபைன் மற்றும் நீர்சத்து அதிகம் உள்ளது எனவே இதனை சாப்பிட்டால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
மேலும் பயனுள்ள தமிழ் குறிப்புகளை YouTube -ல் கான https://www.youtube.com/tamil kuripugal
Tags
உடல் உறவு குறிப்பு