அலைபேசியும் அதன் ஆபத்தும்!!


அனைத்து அறிவியல் கண்டுபிடிப்பிலும் சில நன்மைகள் சில தீமைகளும் உள்ளன. அந்த வகையில் மக்களிடம் அதிகம் பயன்படுத்தப்படும் அறிவியல் கண்டுபிடிப்பான மொபைல் இல்லாத இடங்கள் இல்லை,

இன்றைய காலகட்டத்தில் அவசியமான பொருளாக மாறிவிட்டது செல்போன் . 



ஏற்படும் பாதிப்புக்கள்:-

* தொடர்ந்து முப்பது நிமிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தால் ஒலியை உள்வாங்கக்கூடிய நரம்புகள் பாதிக்கப்படுகிறது. இதன் மூலம் மூளை செயலிழக்கும் அபாயம் உள்ளது.

* தொடர்ந்து அதிக நேரம் பேசுவதால் கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்து மூளையில் இரண்டு வகையான புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



* தொடர்ந்து அதிக நேரம் பேசும்போது கதிர்வீச்சு தாக்கி கழுத்து , மற்றும் தலைப்பகுதியில் இருக்கும் நரம்புகளுக்கு நரம்புத் தளர்ச்சி தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.



* மற்றவர்களை தொடர்புகொள்ளும் போது எதிர்முனையில் இருப்பவர் அழைப்பை ஏற்ற பிறகு காதில்வைத்து பேசுவது நல்லது ஏனென்றால் பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சை விட " ரிங் " போகும்போது 14 மடங்கு அதிகமாகிறதாம் ,

* அலைபேசியை அதிகம் பயன்படுத்துவோர்களில் 40 சதவீதம் பேர்களுக்கு மூளைப் புற்றுநோய் வருகிறது.


* குழந்தைகள் கையில் அலைபேசியை கொடுத்து எதிர்முனையில் இருக்கும் உறவினர்களிடம் பேசச் செல்கிறார்கள் அது மிகவும் தவறானது. பெரியவர்களை விட குழந்தைகளின் மண்டைஓடானது மிகவும் மெல்லியதாக இருக்கும் இதனால் குழந்தைகளின் மூளையை கதிர்வீச்சு நேரடியாக பாதிக்கும்.

* அலைபேசியை அதிகம் பயன்படுத்தும் போது நரம்பு தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல், மன அழுத்தம், ஆழ்ந்த தூக்கமின்மை, கர்ப்பணிகள் பயன்படுத்தினால் சிசு பாதிப்பு , மன பாதிப்பு, போன்ற என்னற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி:-

1. அலைபேசியை (வைப்ரேட்) அதிர்வு நிலையில் இருப்பதை தவிற்க்கவும்.

2. அலைபேசியில் பேசும்போது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்கக் காதில் வைத்து பேசவும் வலது பக்கத்தில்தான் மூளையை பாதிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

3. அலைபேசியை சட்டையின் இடது பக்கவாட்டில் வைக்கவேண்டாம் இதனால் இதயத்தை கதிர்வீச்சு தாக்குதல் குறையும்.



4. அலைபேசியில் அதிகம் விளையாட்டுக்களை விளையாடாமல் இருப்பது நல்லது.
அது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5. தூங்கும் போது அலைபேசியை அருகிலேயே வைத்துத் கொண்டு தூங்கும் பழக்கம் இருந்தால் அதனை தவிற்ப்பது நல்லது.



6. அலைபேசியை காதில்வைத்து பேசுவது மற்றும் ஹெட்செட் மாட்டி பேசுவதை விட "ஸ்பீக்கர் " வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது.

7. அலைபேசியில் சார்ச் தீரும் நேரத்தில் பேசுவது மிக ஆபத்தானது. அப்போது அதிகமான கதிர்வீச்சு வெளியிடுவதால் நம் மூளையில் அக்கதிர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அலைபேசி அவசியம்தான் ஆனால் அதனை அளவாக பயன்படுத்தவேண்டும்,..

by . K.A
மேலும் தமிழ் குறிப்புகளை YouTube -ல் கான  https://www.youtube.com/channel/Tamilkuripugal


Post a Comment

Previous Post Next Post