மனைவியை நேசிக்கும் கணவனின் உணர்வுபூர்வமான எச்சரிக்கை!


ஒருவர் தன்மனைவியை ஒரு சில விசங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் ( அதாவது திட்டுவதால்) அந்த மனைவி கணவனிடம் கேட்டாள்  ஏங்க என்னை இவ்வளவு கன்டிப்புடன் நடத்துறீங்களே.. என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்றாள். அதனை கணவன் சற்று கஸ்டமாகவே உணர்ந்தார்.
ஹ... என்று சிரித்தபடி இதை இவளுக்கு எப்படி புரியவைப்பது என யோசித்தார் கணவர். 

ஒரு நாள் மனைவி தன் கணவனிடம் ஏங்க நான் பட்டம் விட்டு விளையாடப்போகிறேன் நீங்களும் வாங்களேன் என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டைமாடிக்கு சென்றனர் .


பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள், இவ்வாறு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் வேலையில் கணவர் கேட்டார் இந்த பட்டம் பறக்க பறக்க அழகாய் இருக்கிறது ஆனால் அது விருப்பம்போல பறக்கமுடியவில்லையே அதற்கு தடையாய் இருப்பது என்னமா ? என மனைவியிடம் கேட்டார் ,

சட்டென மனைவி பதில் சொன்னாள் இந்த நூல்தாங்க அதை அதுஇஸ்டத்திற்கு பறக்கவிடாமல் கட்டி வைத்திருக்கிறது என்றாள்.

அப்படியா,,
என கேட்டுவிட்டு அந்த நூலை உடனே அருத்துவிட்டார் கணவர். பட்டமும் தன் இஸ்டப்படி பறந்தது சற்றுநேரத்தில் சின்னாப்பின்னமாகி கீழே விழுந்தது..

கணவர் சொன்னார் இந்த பட்டத்தை தன் இஸ்டப்படி பறக்கவிடாமல் தடுக்கவில்லை நேரான வழியில் இந்த பட்டம்பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாக இருந்தது .இதே போல்தான் உன் கணவனாகிய நானும் ஒரு நூல்தான் நீ தான் பட்டம் நீ என்னுடைய நல்லுபதேசங்களை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாப்புடன் உயரே பறக்கலாம் உன் இஸ்டபடி வாழநினைத்தால் இதோ இந்த பட்டம் கிழிந்து காகிதம்போல் உன் வாழ்க்கையும் சின்னாபின்னமாகி சீரழிந்துவிடும் ., 

இப்போது புரிந்திருப்பாய் நன் உன்னை ஏன் கண்டித்தேன் என்று...,

நூலாகிய என்னை அறுத்துவிடாதே என கணவன் சொல்லும் போதே மனைவி தன்கணவனை கட்டி அனைத்துக்கொண்டாள்.
அன்பான மனைவிகளே உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற விசயங்கள் ஏராளம் இருக்கலாம் ஆனால் அவற்றின் முடிவுகள் மோசமானதாக இருக்கும் எனவே கணவனுக்கு கட்டுப்பட்டுவாழ கற்றுக்கொள்ளுங்கள்.

இனிமையான வாழ்க்கை உங்களை வரவேற்கும்.
கணவனின் அன்பும் ,கண்டிப்பும், சரியாக இருந்தால் மனைவியின் குடும்பவாழ்க்கை சிறப்பாக அமையும் ..

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். 
by . K. A

Post a Comment

Previous Post Next Post