பெரியவர்களான நாம் செய்யும் தவறுகளால்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் நமது அலட்சியத்தால் தான் குழந்தைகள் மடிந்து போகிறார்கள்.
வெளிஇடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் கையில் இல்லை என்பது உண்மைதான் ஆனால் நம் வீட்டில் இருந்தே நம் பாதுகாப்பு பணிகளைத் தொடங்கலாமே.
கவனம் கவனம்:-
* சின்ன சின்ன அழிரப்பர், தீ பெட்டி, ஊக்கு, ஊசி, சிறு நாணயங்கள், பல் குத்தும் குச்சி, மீதமான சோப்பு துண்டுகள், பூச்சி மருந்துகள், வாசனை உருண்டைகள், கற்பூரம், சாம்புரானி , கொசு பத்தி, ஊதுபத்தி, பட்டாசு, பிளேடு, கத்தி, கத்தரி கோல், முள்கரண்டி, மண்ணெண்ணெய், பெட்ரோல், டிசல், ஆசிட், இரத மருந்து பாட்டில்கள், ஊசி நீடில், இவை அனைத்தையுமே குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள்,
* சுவிட்ச் பாக்ஸ்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள் அப்படி முடியவில்லை என்றால் அதற்கு செல்லும் மின்சாரத்தினை துன்டியுங்கள்.
* பெரிய டேபில் மீது அலங்காரத் துணியினை விரித்து அதன் மீது கனமான பொருட்களை வைக்காதீர்கள். குழந்தைகள் துணியினை இழுத்தால் அது குழந்தையின் மீதே விழக்கூடும்,
* குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் குழந்தைகள் சீண்டாத படி சுவரைஒட்டி வையுங்கள்.
* டேபிள் ஃபேன், சுடர் விளக்குகள், மெழுகுவத்தி ஆகியவை குழந்தைகளை வசீகரிக்கும் பொருளாகும் எனவே அவற்றை குழந்தைகள் அருகில் வைக்காதீர்கள்,
* குழந்தைகளின் பள்ளி உணவுகளை விக்கிகொள்ளும் அளவுக்கோ தொண்டையில் சிக்கிக்கொள்ளும் அளவுக்கோ உள்ள கடினமான பெரிய அளவிலான உணவுப்பொருட்களை கொடுப்பதை தவிற்க்கவும், குறிப்பாக பெரிய இறைச்சி, அல்லது எழும்புத்துண்டுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும் போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை.
* குழந்தைகள் தூக்கும் போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ இஸ்திரி போடுவது, மின்சார சாதனங்களை பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையை கழுவுவது போன்ற பணிகளைச்செய்வது நல்லது.
* சுவர்களில் மாட்டும் கண்ணாடி , கனமான கடிகாரம், அலங்கார ஓவியங்கள் , ஒளிப்படங்கள் ஆகியவற்றை குழந்தைகள் கைக்கு எட்டாத உயரத்தில் உறுதியான ஆணியை அடித்து மாட்டுங்கள்.
* குளிர் பானங்கள் இருந்த பாட்டில்களில் மண்ணெண்ணெய் , டிசல், போன்றவற்றை ஊற்றி வைக்காதீர்கள்,
* தொட்டி துணி, திரைச்சீலைகள், அலங்கார தோரணங்கள் போன்றவற்றிலும் கவனம் தேவை அது விளையாடும் போது அது கழுத்தை இருக்கிவிடும் ஆபத்து உள்ளது.
* தண்ணீர் தொட்டிகளை குழந்தைகள் எட்டும் அளவில் வைக்ககூடாது அப்படி வைத்தாலும் அதனை குழந்தைகள் திறக்க முடியாத அளவிற்கு மூடி வைக்கவும்.
இப்படி இன்னும் என்னென்ன அபாய அம்சங்கள் நம்மை சுற்றி உள்ளன என்று யோசியுங்கள் உங்களுக்கு இன்னும் நிறைய தட்டுப்படலாம்.,
நம் குழந்தைகளை நம்மால்தான் பாதுகக்க முடியும்.
Tags
பயனுள்ள தகவல்