உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடிக்காவிட்டால் அதுவே உடல் நலனுக்கு கேடாக மாறிவிடும். அதிலும் முறையற்ற உணவுப் பழக்கங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்,
இதயத்தை பாதிக்கும் உணவுப் பழக்கங்கள்:-
* மதிய உணவு சாப்பிட்டபிறகு இனிப்பான பதார்த்தங்களை உண்பதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவை சாப்பிட்ட மன நிறைவை கொடுக்கும் என்று நினைக்கின்றனர் உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு வகைகளை ருசிப்பது இன்சுலின் அளவை அதிகரித்துவிடும் அதன் தாக்கமாக நீரிழிவு நோய், இதய நோய், உண்டாகக்கூடும் எனவே சாப்பிட்ட பிறகு இனிப்புவகைகளை தவிற்கவேண்டும் .
* காரமான உணவுகளை சாப்பிடுவதையும் தவிற்க வேண்டும். மிதமான காரத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அதிக காரத்தால் இதயத்திற்கு பாதிப்புஏற்படும். மற்றும் உணவில் ஏலக்காய், இலவங்கபட்டை, மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும் இது இதயத்திற்கு நல்லது.
* உணவு வகைகளில் அதிக எண்ணெய் மற்றும் மசாலாவை சேர்ப்பதை தவிற்க்கவேண்டும் அவை இதயத்திற்கு நல்லதல்ல, அதேபோல் ஒரே வகையான சமயல் எண்ணெய்யையும் நீண்டகாலத்திற்கு பயன்படுத்தகூடாது.
* அசைவ உணவுவகைகளை தொடர்ந்து சாப்பிட்டுவரக்கூடாது அதில் உள்ள கொழுப்புக்கள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எப்போதாவது மீன், இரச்சி வகையான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் இதில் இருக்கும் புரதங்கள் மற்றும் ஒமேகா3 கொழுப்புகள் இதயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
* உணவில் சுவையை கூட்டுவதற்க்காக உப்பை அதிகம் சேர்க்ககூடாது அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை உப்பு அதிகம் சேர்க்கும் போது ரத்தஅழுத்தம் உயரும் இது இதய நோய் உருவாக காரணமாக அமையும்.
தகவல் திரட்டப்பட்டது:
by . K.A
Tags
மருத்துவ குறிப்புகள்