மழைக்காலத்தில் பின்பற்றவேண்டிய நடவடிக்கைகள் !


மின்சாரம் சார்ந்த நடவடிக்கைகள் :-

* மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்பும் பின்பும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.
* உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும்.
* டிவி, ஆண்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபில் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம்.

* மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிற்கவும்.
* மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டவேண்டாம்,
* இடி மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி, போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்,
* இடி மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவற்றின் கிழே நிற்பதை தவிற்க்கவும்.,

மழைக்காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்:-

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது என கேட்டால் பெரும்பாலானோர் கண்டிப்பாக மழைக்காலம்தான் என்பார்கள்.
மழைக்காலத்தை நாம் எவ்வளவு அதிகம் ரசிக்கின்றோமோ அதே அளவு அதில் ஆபத்தும் உள்ளது. அதிலும் இத்தகாலத்தில் அதிக நோய்கள் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது.

எனவே மழைக்காலத்தில் நம்மை நோய்கள் தாக்காதவாறு நம்மைநாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் வரும் நோய்கள்:-

* மலேரியா,
* வயிற்றுப்போக்கு,
* சிக்கன்குனியா,
* டைபாய்டு,
* வைரஸ் காய்ச்சல்,
* காலரா,
* மஞ்சல் காமாலை,
போன்ற நோய்கள் நம்மையும் நம் குழந்தைகளையும் தாக்கக்கூடும் எனவே பாதுகாப்பு மிக அவசியமானது.

மழைக்காலத்தில் வாகனங்கள்:-

மழைக்காலங்களிலேயே அதிக விபத்துக்கள் நடக்கின்றன , கவனமாக வாகனங்களை செலுத்தவேண்டும்,

* மழை பெய்யும்போது தண்ணீர் நிரம்பிய சாலையில் டு-வீலரை ஓட்டும்போது கவனம் தேவை.
* மழைக்காலங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால் வாகனத்தில் ஹெட்லைட்டை எரிய செய்வது நல்லது,

* மழைக்காலத்தில் சிலர் உற்சாகம் அடைந்து அதிகவேகத்தில் செல்கின்றனர் அதனை தவிற்பது நல்லது,
* வளைவு சாலைகளில் மிக குறைந்த வேகத்தில் வாகனங்ங்களை செலுத்தவேண்டும்,

தகவல் : திரட்டப்பட்டது .

Post a Comment

Previous Post Next Post