F. I.R - என்றால் என்ன ? படிங்க.!!


முதல் தகவல் அறிக்கை. F.I.R என்றால் என்ன ?

first information Report . என்பது முதல் தகவல் அறிக்கை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப்படும் வழக்கு ஆவணம்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் அனைத்து வகை குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம் . அதாவது புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்ட வரை கைது செய்ய வேண்டிய குற்றங்கள்.

உடலில் இரத்த காயங்களை ஏற்படும் குற்றங்கள் ,சிறிய பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை. உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவைகளுக்கு உடனடியாக FIR பதிய வேண்டும்.

உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை 
இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் F.I.R பதிவு செய்ய முடியும்.

மேல் அதிகாரிகளான டி.எஸ்.பி எஸ்.பி என எவரிடமும் புகரைப் பதிவு செய்யலாம் . பாதிக்கப்பட்டவர்கள் வாய்மொழி வாக்குமூலத்ததை புகாராக அளிக்கலாம். பின்பு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமுலத்தை புகாராக எழுதி புகார்தாரர் கையொழுத்தையே அல்லது கை ரேகைளயயோ அதில் இடம் பெற செய்ய வேண்டும்.

குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்து உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும்.
பிறகு தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அந்த F.I.R -ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பி விட வேண்டும்.

ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும் அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத் தான் புகார்தாரர்.நீதிமன்றம் என விகியோகிக்க வேண்டும் புகார் தந்தவருக்கு F.I.R நகல் கொடுக்க வேண்டியது அவசியம் அப்படி காவல் துறை தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.

ஆதாரம் : Vikaspedia.in 

தொகுப்பு: K.A

Post a Comment

Previous Post Next Post