இயற்கையாக விளையும் பழங்களை செயற்கை முறையில் விரைவில் பழுக்க வைத்து விற்பனைக்கு அனுபிவிடுகின்றனர். குறிப்பாக கார்பைடு கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்து சந்தைக்கு அனுப்புகின்றனர். இந்த பழங்களை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன..
ரசாயன பொருட்களைக் கொண்டு பழங்களை பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக மாம்பழம் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காக தான் ஆனால் செயற்கையாக பழுக்க வைத்த பழங்களில் இவை எதுவும் இருக்காது.
செயற்கையாக பழுக்க வைத்ததை எப்படி கண்டுபிடிப்பது:-
* எந்த பழமும் பளபளப்பாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் நல்ல பழமாக இருக்க வாய்ப்பில்லை.
* பழுத்த மாம்பழம் கொஞ்சம் கொழகொழப்பாக தான் இருக்கும் ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அப்படி இருக்காது.
* இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் மஞ்சல் நிறத்தில் மட்டுமல்லாமல் சற்று இளஞ்சிவப்பாகவும் பச்சை நிறத்தோடு காணப்படும்.
* மாம்பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப் பட்டது போல கருப்பாக இருந்தால் அது கார்பைட்கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டது.
* இயற்கையாக பழுக்கும் மாம்பழம் காம்புப் பகுதிதான் கடைசியாக பழுக்கும். பழம் காம்பை நோக்கி தான் பழுத்துக்கொண்டு செல்லும். செற்கையாக பழுக்க வைக்ப்பட்டவை அப்படி இருக்காது
தொகுப்பு : by . K. A
Tags
பயனுள்ள தகவல்