குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா நீங்கள்?


குழந்தை வளர்ப்பில் பெற்றோர் என்ன விதைக்கிறார்களோ அதுவே முளைக்கும்.
நீங்கள் எந்த வகை பெற்றோர் என்று நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே உங்கள் பிள்ளைகளை நீங்கள் நன்றாக வளர்க்க முடியும்.

குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா நீங்கள் ?
பிள்ளைகள் முன் சண்டையிடுவது, பிள்ளையின் தலை மீது சத்தியம் செய் என்று துணையை மிரட்டுவது, பிள்ளை மூலமாக ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது, என குழந்தை வளர்பில் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அத்தனையும் செய்யும் இந்த வகை பெற்றோர்களால் குழந்தைகள் கோள் பேசும் பிள்ளைகளாகவும் தீய என்னம் கொண்ட பிள்ளைகளாக வளர்வார்கள்.

இதன் தொடர்ச்சியாக குழந்தைகள் தனக்கு ஒரு வேலையாக வேண்டும் என்றால் அம்மாவை பற்றி அப்பாவிடமும் ,அப்பாவை பற்றி அம்மாவிடமும் போட்டுக் கொடுக்கவும் செய்வார்கள்.

குழந்தை முன் சன்டை போடும் பெற்றோர்களின் குழந்தைகள் பொறுப்பானவர்களாக இருக்க மாட்டார்கள்.

என் குழந்தை இப்படி செய்வார்களா என்று யோசிக்க வேண்டாம் என்ன விதைக்கிறமோ அதுதானே முளைக்கும்.

குழந்தைகளுக்கு நற்செல்களை பெற்றோர் விதைக்க வேண்டும் குழந்தைகள் முன் அன்புடனும் பாசத்துடனும் இருக்க வேண்டும் பிள்ளைகளிடம் உன்மையை பேசும் போது பிள்ளைகளும் உன்மையை பேசுவார்கள்.

பெற்றோர் உங்களுக்குள் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதை குழந்தை முன் காட்டாதீர்கள் அது உங்கள் குழந்தையின் மனதினை பாதிக்கும்.

குழந்தைகள் இருக்கும் போது பெற்றோர் தீய வார்த்தைகளை பயன்படுத்தாதீர். நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுங்கள்.
உங்கள் குழந்தைகளை சிறந்த குழந்தைகளாக வளர்க்க வாழ்த்துக்கள்.

by . K.A

Post a Comment

Previous Post Next Post