கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ள வெல்லம்..!!


வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது அதிலும் இதை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்த்தின் அளவு அதிகரித்து ஞாபக மறதியை தடுக்கலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும் காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும் சிலருக்கு, தலை சுற்றலும் ஏற்படும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.,

ஒவ்வாமையால் ஏற்ப்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம் ,வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கு தெரியாது.

வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது அது உணவுக்குழாய்,வயிறு, நுரையீரல்,என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது வெல்லம்.

செரிமான திரவங்களைத் தூண்டி விட்டு ஜிரணத்தை சரி செய்யும் சக்தி வெல்லத்துக்கு உண்டு.
பித்தம் வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து குடிக்கலாம்.

வெல்லத்தில் அதிக இரும்பு சத்தும் கால்சியம் உள்ளது இதில் சர்க்கரை தயாரிப்பின் போது அதை வென்மையாக்க சில ரசாயனங்களை சேர்ப்பதால் சர்க்கரையில் இரும்புச் சத்து அழிக்கப்படுகிறது. 

வெல்லம் தயாரிப்பில் அந்த இழப்பு ஏற்படுவதில்லை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக்கூடிய குடல் புழுக்களை கட்டுப்படுத்த அதிகாலை வெல்லத்தை சிறிது அரிவு சாப்பிட்டால் போதும் அது நல்ல பயன் தரும்.,

தகவல் : Web Dunia
by . K. A

Post a Comment

Previous Post Next Post